பக்கம்:நெய்தற் கன்னி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இ. புலவர் கா. கோவிந்தன்

அவன் பிரிவைத் தாங்கிக் கொள்ள மாட்டாது தளர்ந்து போயினாள். அவனைக் காணப் பெறாமையால் அவள் கண்கள் கலங்கினாள். அவன் வாராமை கண்டு அவள் சிந்தை செயலழிந்து நொந்தது. அவன் வந்து இன்பம் தாராமையால் இடர் உற்றது அவள் உள்ளம். வந்து அருள் கூர்ந்து அளிக்கும் அன்பு கலந்த இன்பத்தால் தணிவ தல்லாது, வேறு மருந்தாலோ, மந்திர மொழிகளாலோ தீரலாகாப் பெருநோய் அளித்த அவன், அந்நோய் என் உயிரைக் கொள்ளை கொள்வதன் முன் வந்து காத்திலனே' என எண்ணிக் கலங்கினாள். இவ்வகை எண்ண அலைகளால் கலங்கிய உள்ளத்தோடு, அவன் வருகையை எதிர் நோக்கிக் காத்துக் கிடந்த அவள், தன்னைச் சூழ மக்கள் உள்ளனரே, தன் உள்ளத் துயர் அவர்க்குப் புலனாதல் கூடாதே, அவர் அஃது அறிந்து கொண்டால் அவனைப் பழிப்பரே, கணவனைக் கண்டோர் பழிக்கப் பார்த்திருப்பது கற்புடை மகளிர்க்குப் பொருந்தாதே, அதிலும் அவர் அவனைப் பழிக்கத் தானே காரணமாவது தனக்கு இழுக்காமே என, இவற்றுள் எதையும் அவள் எண்ணிப் பார்த்திலள். எண்ணிப் பார்க்கும் நிலையில் அவள் உள்ளமும் இல்லை. அதனால், தன் கண் முன்னே, கரை காண மாட்டாது பரந்து கிடந்த கடலை இமை கொட்டாது பார்த்திருந்த அவள், அக்கடல் அலை எழுப்பும் ஒலியைக் கேட்டதும், "எளிதில் அழிந்து போகாத காதல் நோயை எனக்கு அளித்த கணவன் என்னை மீண்டும் வந்து காணும் கருத்திலனாய்க் கலம் ஏறிச் சென்று விட்டான். அந்நினைவால் வருந்தும் என்னை இக்கடும் பணியும் கொடுமை செய்கிறது. அதனால் மாளாத் துயரில் ஆழ்ந்து போன என் உள்ளம்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/136&oldid=590213" இலிருந்து மீள்விக்கப்பட்டது