பக்கம்:நெய்தற் கன்னி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ல் 135

கலங்கிக் கண்ணிர் வடிக்கிறது. இந்நிலையில், என் அருகிருந்து ஆறுதல் அளித்து அருள் புரிய வேண்டிய வரெல்லாம், என் நிலை கண்டு ஏதும் புரிந்திலர். ஆனால் என் முன் கிடந்து ஓயாது அலை எழுப்பும் இக்கடல் மட்டும் என் நோயைத் தன் நோயாகக் கொண்டு, உளம் நொந்து ஒலம் இடுகிறது. இது என்ன வியப்போ?

"காதல் நோயுற்றமையால் நான் இழந்து போன என் நலத்தை மீண்டும் என்பால் தந்து துணைபுரிவார் எவரும் இலரே என நினைந்து நைந்துருகும் என்னை, இக்கொடிய பனி மேலும் கொடுமைக் குள்ளாக்குகிறது. அதனால் துயருறும் என் நிலை கண்டு இரங்கி வருந்துவார் ஒருவரும் இலராக, இதோ என் முன் நின்று காட்சியளிக்கும் இம் மணற் குன்று, என் நிலைக்கு இரங்கி, உள்ளம் நெகிழ்ந்து உருகுவதுபோல், அலை வந்து அலைக்குந்தோறும் சிறுகச் சிறுகக் கரைந்து உருவிழந்து போகிறதே, இது என்ன வியப்போ? -

"மாண்டு மடிந்தாலாவது என் மனத்துயர் மறையும். ஆனால், அவ்வாறு இறந்து போகாது இருந்து துயர் உறும் வண்ணம் வாராதிருந்து வருத்தும் என் காதலன் செயல் கண்டு செயலற்றுப்போன என் உள்ளம், மயங்கி மடங்கிக் கிடக்கின்றதாக, என் நிலை கண்டு இரங்குவதுபோல், இம்மரங்கள் எல்லாம் இலை குவிந்து வருந்துகின்றனவே! இது என்ன வியப்போ!' என வாய் திறந்து புலம்பினாள்.

அவள் புலம்பலொலி ஆங்கிருந்தோர் கருத்தை அவள்பால் ஈர்த்தது. அவர்கள் அவள் நனி இளமைப் பருவமும், அவள் நெஞ்சை வருத்தும் காதல் நோயின் கொடுமையும் கண்டு, அவள் நிலைக்குப் பெரிதும் இரங்கினர்; அந்நிலையில், சில கலங்கள் கரை வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/137&oldid=590214" இலிருந்து மீள்விக்கப்பட்டது