பக்கம்:நெய்தற் கன்னி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இ. புலவர் கா. கோவிந்தன்

சேர்ந்தன. அவற்றிற்கிடையே தன் காதலனுக்குரிய கலமும் இருக்கக் கண்டாள். அவ்வளவே. அக்கலக் காட்சி, அவள் கணவன் வருகையைக் காட்டிவிடவே அவள் கலக்கம் இருந்த இடம் தெரியாது அழிந்தது; கண்களில் நீர் மறைந்தது; களிப்புக் களிநடம் புரிந்தது.

அவள் சற்று முன் கலங்கிக் கண்ணிர் விட்ட காட்சியைக் கண்டு வருந்திய மக்கள், கணவனைக் காணப் பெற்றதும் களிப்புக் கடலில் ஆழ்ந்து போன அந்தக் காட்சியையும் கண்ணுற்றனர். அவள் துயர் தீருமா என எண்ணிப் பார்க்கவும் இயலாதிருந்த அந்நிலை மாறி அவள், அவள் கணவனைப் பெற்று மகிழும் அந்நிலை வந்து வாய்ந்தது, அம்மம்ம அரிதினும் அரிதாம்! கண்ணிற் கெட்டிய தொலைவெங்கும் நோக்கினும் கரை புலப் படாத நடுக்கடலில் கலம் ஒன்று கவிழ்ந்து போகக் கடலில் வீழ்ந்து, நீந்த மாட்டாதோ, நீந்தவல்ல ஆற்றலை இழந்தோ, அக்கடல் வாழ் உயிரினங்கட்கு உணவாகியோ இறந்து போவது உறுதி. அது எந்நேரத்தில் வாய்த்து விடுமோ என எண்ணி இடர் உற்ற ஒருவர், தன் கண்முன், புணையாகிப் பயன்பட வல்ல பலகை ஒன்றை அலை கொண்டு வந்து அளிக்கப் பெறுவதோடு, அப்புணை, அவனை, அவன் சேர வேண்டிய துறைக்கண் இடர் இன்றிக் கொண்டு சேர்க்கவும் செய்யுமாயின், அவன் மகிழ்ச்சிக்கோர் எல்லை காணல் இயலுமோ? அவன் மகிழ்ச்சி அவள் மகிழ்ச்சியாயிற்று. கணவன் வருவன் என எண்ணு வதற்கும் இல்லையே! எப்போது வருவான் என அறிந்து கொள்வதும் இயலாதே! அதுகாறும் என் உயிர் அழிவுறாது வாழும் என்பதற்கு உறுதி இல்லையே! என வருந்தி யிருந்தவளின் வருத்தமெல்லாம் ஒருங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/138&oldid=590215" இலிருந்து மீள்விக்கப்பட்டது