பக்கம்:நெய்தற் கன்னி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி , 137

மறைதலோடு, அவள் உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தால் நிறையும் வண்ணம், பிரிந்து போன கணவன், அவள் எதிர்பாரா நிலையில் வந்து சேரக் கண்டு மனங்களித்துச் செருக்குற்ற அவளையும், வந்து வாழ்வளித்த அவள் கணவனையும் வாழ்த்தினர்.

"மல்லரை மறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன் ஒல்லாதார் உடன்றுஒட உருத்துஉடன் எறிதலின் கொல்யானை அணிநுதல் அழுத்திய ஆழிபோல் கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின் . இருங்கடல் ஒலித்து ஆங்கே இரவுக்காண் பதுபோலப் 5 பெருங்கடல் ஒதநீர் விங்குபு கரைசேரப், போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப் பாயல்கொள் பவைபோலக் கயமலர் வாய்கூம்ப ஒருநிலையே நடுக்குற்று இவ்வுலகெலாம் அச்சுற இருநிலம் பெயர்ப்பன்ன எவ்வங்கூர் மருள்மாலை, 10

தவலில்நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின் இகல் இடும்பனிதின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே கவலைகொள் நெஞ்சினேன் கலுழ்தரக் கடல்நோக்கி அவலம் மெய்க்கொண்டது போலும், அஃது

எவன்கொலோ?

நடுங்குநோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் 15 கடும்பனி கைம்மிகக் கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே நடுங்குநோய் உழந்தஎன் நலன் அழிய, மணல்நோக்கி இடும்பைநோய்க்கு இகுவனபோலும், அஃதுஎவன்

- கொலோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/139&oldid=590216" இலிருந்து மீள்விக்கப்பட்டது