பக்கம்:நெய்தற் கன்னி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஆழ் புலவர் கா. கோவிந்தன்

வையினர்; நலன்உண்டார் வாராமை நினைத்தலின் கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே. 20 மையல்கொள் நெஞ்சோடு மயக்கத்தால் மரன்நோக்கி எவ்வத்தால் இயன்றபோல் இலைகூம்பல் எவன் கொலோ?

எனவாங்கு, கரைகாணாப் பெளவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன் திரைதரப் புனைபெற்றுத் தீதின்றி உய்ந்தாங்கு 25 விரைவனர் காதலர் புகுதர, நிரைதொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே." i மாலைப் பொழுது கண்டு தலைவி ஆற்றாளாக, அந்நிலையில் தலைவன் வரத் தலைவி துயர் தீர்ந்து மகிழ்ந்ததை வாயிலார் கண்டு, தம்முள்ளே வாழ்த்திக் கூறியது.

1. ஒல்லாதார் - பகைவர்; உருத்து - சினந்து. 3. ஆழி - சக்கரம்;4. கல் - மலை. 5. இருங்கடல் - பெரிய கடல். 6. வீங்குபு - பெருகி. 7. போஒய - போய்விட்ட வண்டு போயதால் என மாற்றுக. புல்லென்ற - தனிமையுணர்ச்சி மிக்க, 8. பாயல் - உறக்கம். கயமலர் - நீர்ப்பூக்கள். 10. பெயர்ப்பு - அழிவு. எவ்வம் துன்பம். கூர் - மிக்க. 11. தவல் இல் - அறிவு இல்லாத. 12. இகல் இடும் - மாறுபட்டுத் துயர் தரும்; தின - துன்புறுத்த, எவ்வம் - நோய். 13. கலுழ்தர - வருத்த. 14. அவலம் - அத்துயரை. 16. கையாறு - செயலறுதல்; அதாவது அழிதல். 17. மணல் - மணல்மேடு. 18. இடுவன - கரைவன. 19. வையினர் - வாராதே தங்கிவிட்டவர். 24. பெளவம் - கடல், கலம் - நாவாய். 25. திரை - அலை, புணை - தெப்பம், உய்ந்தாங்கு- பிழைத்ததுபோல், விரைவனர் - விரைந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/140&oldid=590217" இலிருந்து மீள்விக்கப்பட்டது