பக்கம்:நெய்தற் கன்னி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 141

அவன் வருகை, இடையிடையே தடையுற்றுப் போய்விடும்; பல நாட்கள் அவனைக் காண்பதற்கே இயலாதாம். அந்நாட்களி லெல்லாம் அவள் நனிமிக வருந்தினாள். அவனைக் காணாமையால் அவள் அகத்தில் எழும் கலக்கம், அவனைக் காணா நாட்களின் எண்ணிக்கை வளர வளரத் தானும் வளர்ந்து பெருகலாயிற்று. அவள் உள்ளத்தைப் பற்றி வருத்திய அக்காதல் நோய், அவள் உடலையும் வருத்தத் தலைப்பட்டது. தோள் தளர்ந்தது; ஒரு காலத்தில் இறுகச் செறித்து இட்ட தொடியணி தானே கழன்றோடத் தொடங்கிற்று; தொடியணி இழந்த தோளின் தோற்றம் கண்டு அப்பெண் கண்ணிர் சொரிந்து கலங்கினாள். அழுது அழுது அக்கண்களும் அழகிழந்து போயின; குவளை மலர்க் கண்ணள் எனப் புகழ்ந்து பாராட்டப் பெற்ற அவை, அம்மலர்கள் கண்டு இகழ்தற்கு ஏதுவாய்ப் -- பொலிவிழந்து போயின! பொதுவாகக் கூறினால், அவள்

மனநோய்வாய்ப் பட்டவளாயினாள்.

அவள் நிலை கண்டு தோழி நெடிது வருந்தினாள். அவள் உடல் நலக் கேடு கண்டு கலங்கியதினும், அது காணும் அவள் பெற்றோர் அந்நிலைக்கான காரணத்தை உசாவி அறிந்து கொள்வரோ, அவர் அறிந்துகொண்டால் இக்கன்னிப் பெண்ணின் கற்பு என்னாம், அக்காவலன் மகனின் காதல்தான் என்னாம் என்றெல் லாம் எண்ணியே பெரிதும் கலங்கினாள். மேலும் ஊரார், இவளை இன்னது செய்தான் இவன் என அறிந்து, காதல் கொண்ட காரிகையைக் கைவிட்டு வாழ்கின்ற அவன் ஒரு காவலன் மகனாமே. அவன் குடிப் பண்பு அவ்வளவுதான் போலும்; அவன் வாய்மை வளமும் அன்னதோ? என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/143&oldid=590220" இலிருந்து மீள்விக்கப்பட்டது