பக்கம்:நெய்தற் கன்னி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 * புலவர் கா. கோவிந்தன்

அவனைப் பழிப்பராயின, குடிப்பிறப்பாலும், பாராட்டத் தக்க பண்புகளாலும் அவன் பெற்ற புகழ் என்னாம் என அவன் புகழ்க் கேடு குறித்தும் கவலையுற்றாள். கவலை யுற்றவள், கண்ணிர் விட்டுக் கலங்கியிருக்கும் அப்பெண் போல் தானும் கவலையுற்று விடுவதால் எப்பயனும் உண்டாகாது. இதற்கு ஒரு வழி காணுதல் வேண்டும்; வாய் மூடிக் கிடப்பதால் பயன் இல்லை; ஆனால், எதையும் செய்தல் அவளால் இயலாது. அதையும் நானே செய்தல் வேண்டும்! என உறுதி பூண்டாள்.

உடனே, ஒரு நாழியும் கழியாது, அவன் ஊர்க்குச் சென்று அவனைக் கண்டாள். ஆங்கு அவன் கடற்கரை யருகே அமர்ந்து, காற்று விரைந்து அடிக்க அடிக்க மலை போல் எழும் அலைகள், கடல் அடியினின்றும் வெளிப்படும் வலம்புரிச் சங்குகள் இணை இணையாகத் தோன்றித் தம்மோடே அலைப்புண்டு வரக் கரையை நோக்கிப் பாய்ந்து, அக்கரைக்கண், காற்று எழுப்ப எழுந்து பெருங் கோட்டை போல் காட்சியளிக்கும் மணல் மேட்டின் உச்சிக்கண் மோதி மோதி மீளும் காட்சியைக் கண்டு, அக்காட்சி, தன் நாற்படையின் நடுநாயகமாய் விளங்கும் யானைப்படை, பாகர் செலுத்த விரைந்து ஓடித், தத்தம் வெண்ணிறத் தந்தங்களால், பகைவர்க்குரிய கோட்டை வாயிலை அடைத்து நிற்கும் வலிய நெடிய கதவுகள் பிளந்து போமாறு பல முறை மோதி மோதி அழிக்கும் வெற்றிப் புகழ் விளங்கும் அக் காட்சியை நினைவூட்ட, நினைந்து, நெஞ்சுக்குள்ளே மகிழ்ந்திருந்தான். அவனை அந்நிலையில் கண்ட தோழி, "அலைகடல்

காட்சியில், தன் படை அமர் வெல்லும் காட்சியைக்

கண்டு களிப்புறும் இவன் ஊரார் உரைக்கும் அலரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/144&oldid=590221" இலிருந்து மீள்விக்கப்பட்டது