பக்கம்:நெய்தற் கன்னி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி 143

இவன் புகழ்க் கோட்டை அழிவுறுவதை அறிந்தில்னே, என்னே இவன் இயல்பு!" எனத் தனக்குள்ளே எண்ணி எள்ளி நகையாடினாள்.

நகையொலி கேட்டு, அவன் அவளைத் திரும்பி நோக்கினான். உடனே, அவள் அவனை அணுகி, "அன்ப! உலகில் பிறந்தார் ஒவ்வொருவரும் தாம் பிறந்த குடியின் பெருமையைக் குன்றின்மேல் ஏற்றி வைத்த விளக்கென விளங்க வைக்கவே விழைகின்றனர்; விரைகின்றனர். ஆனால் நீயோ, அக் குடிப் புகழ் குன்றுவதற்கு ஏதுவாய சிறுமைகளையே செய்து சீரழிகின்றனை. பெரியோர் தம் வாய்ச்சொல் வழுவாதிருத்தல் வேண்டும்; அதுவே தம்மை வாழ்விக்கும்; தம் உயர் புகழிற்கு அதுவே உற்ற துணையாம் என அறிந்து, எப்பாடு பட்டேனும், எத்தகைய இடர் நேர்ந்தபோதிலும், சொன்ன சொல்லை நின்று காக்கின்றனர். ஆனால் நீயோ, வாய்மையில் வழுவாது நிற்பதால் விழுமிய இன்பம் வலிய வந்து வாய்க்கிறது என்பதை அறிந்தும், அதைக் காத்துக் கொள்ளக் கருதுகின்றிலை, அதனால், பிறவிக் கடன் புகழ் பெற்று வாழ்தலாம் என்ற உயர்ந்த உண்மையை உணர்ந்து, அப்புகழ் பெறப் பாடுபடுவதற்கு மாறாக, உள்ள புகழ் உருவிழந்து போதற்காம் செயல்களையே உவந்து மேற் கொள்கின்றனை. என்னே நின் மடமை!" என இடித் துரைத்தாள்.

குடிப்புகழ் காப்பதாலும், வாய்மைக்கண் வழுவாது நிற்பதாலும் தன் புகழை நிலைநாட்டத் துடித்து நிற்கும் இவ்விளைஞன், தோழி, "உன் புகழிற்குக் கேடு நிகழ்ந்து விட்டது. அதுவும் உன்னாலேயே!” என உரைக்கக் கேட்டவுடனே நிலை கலங்கி விட்டான். அக்கேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/145&oldid=590222" இலிருந்து மீள்விக்கப்பட்டது