பக்கம்:நெய்தற் கன்னி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ↔ .f45

இன்றே விரைந்து போய் வினையாற்றுமாறு உன்னை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்!” எனக் கூறி வரைவு கடாயினாள். -

"துணைபுணர்ந்து எழுதரும் தூநிற வலம்புரி இணை திரள் மருப்பாக, எறிவளி பாகனா, - அயில்திணி நெடுங்கதவு அமைத்து அடைத்து அணி

- - (கொண்ட

எயில்அடு களிறேபோல் இடுமணல் நெடுங்கோட்டைப் பயில்திரை நடுநன்னாள் பாய்ந்துறு உம் துறைவ! கேள்; 5 கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடி நெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால்; மற்றுநின் குடிமைக்கண் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ? ஆய்மலர் புன்னைக்கீழ் அணிநலம் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயால்; மற்றுநின் 10 வாய்மைக்கண் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ? திகழ்மலர்ப்புன் னைக்கீழ்த் திருநலம் தோற்றாளை இகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயால்; மற்றுநின் புகழ்மைக்கண் பெரியதோர் புகராகிக் கிடவாதோ?

எனவாங்கு, 15 சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே அணிகிளர் நெடுவரை அலைக்கும் நின் அகலத்து மணிகிளர் ஆரம் தாரொடு துயல்வர உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கொலி நெடுந்திண் தேர் கடவுமதி விரைந்தே.”

வரையாது வந்தொழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது. -

நெய்தல்-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/147&oldid=590224" இலிருந்து மீள்விக்கப்பட்டது