பக்கம்:நெய்தற் கன்னி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

ஏறுக தேரே!

கண் கவரும் அழகு மிக்க கடற்கரையில் அலை வீசும் நீர் அருகே அமர்ந்து, நீல நிறக் கடலையும் அக் கடலில் தோன்றிக் கரையில் மோதி மீளும் அலைகளையும், அவ்வலைகள் கொண்டு வந்து குவிக்கும் மணல் மேட்டையும், அம்மணல் மேட்டில் மகிழ்ந்து ஆடும் நண்டுகளையும், அந்நண்டுகள் நகர்ந்தோடுங்கால், அம்மணல் மீது வரி வரியாக விழும் கோடுகளையும் கண்டு மகிழ்ந்திருந்தான், காளைப் பருவம் பெற்ற கவின் மிக்க ஓர் இளைஞன். அக் காட்சியில் தன் கருத்திழந்து வீற்றிருந்த அவன் அருகே வந்து சேர்ந்தாள் ஒரு பெண். தோற்றம் பெருங்குடி வந்த மகளிரோ டொப்ப வளர்ந்து, அன்னோரோடு தோழமை.பூண்டவள் போல் காட்டிற்று. வந்து நின்றவள் இளைஞனின் கண்ணோக்குச் செல்லும் காட்சிகளையும், அக்காட்சிகளைக் காண்பதால் அவன் முகத்தில் நிழலாடும் அவன் நெஞ்சின் அலைகளையும் உற்று நோக்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/149&oldid=590226" இலிருந்து மீள்விக்கப்பட்டது