பக்கம்:நெய்தற் கன்னி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெயதற் கன்னி இ 13

போனவன் நெடு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவன் குறித்துச் சென்ற காலமும் கடந்து விட்டது; அப்போதும் அவன் வரவில்லை. அதனால் அவள் வருத்தம் மிகுந்தது. ஒருநாள் ஞாயிறு மறைந்தபின்னர்த் தன் மனையின் முன்னிடத்தே வந்து காதலன் வருகையை எதிர்நோக்கி நின்றாள். அப்போது கண்ட அம்மாலைக் காட்சி அவள் துயரை மேலும் தூண்டிவிட்டது. அக்காலம் ஞாயிறு காயும் பகற் காலமும் அன்று நிலவொளி வீசும் இராக் காலமும் அன்று; அவ்விரண்டிற்கும் இடைப் பட்டது அக்காலம். ஞாயிறு மலை வாயில் வீழ்ந்து விட்டான்; திங்கள் இன்னமும் தோன்றவில்லை. இருளை ஒழித்து, உயிர்களுக்கு உணவும் உணர்வும் ஊட்டிய ஞாயிற்றின் ஒளி இழப்புக் கண்டு, மக்கள் மருண்டனர். ஞாயிறுபோல் பேரொளியும், உயிர் வளர்க்கும் பெரும் பயனும் தாராதாயினும், தண்ணொளியேனும் தரும் அன்றே எனும் நினைவால், அத் திங்களின் வருகையை ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருக்கும் காலம், அம் மாலைக் 35/76t).LD.

இயல்பாகவே மக்கள் உள்ளத்தின் அமைதியை அழித்து விட்ட அம்மாலை, அவள் மனத் துயரை மேலும் மிகுவித்தது. மனை வாயிற்கண் வந்து நின்ற அவள் கண்முன் ஒரு பொய்கை தோன்றிற்று. மலர் நிறை மரம் செடி கொடிகள் மண்டி வளர்ந்த கரைகள் சூழ இருந்த அக் குளத்தில் அன்று காலை மலர்ந்த மலர்கள் மாலை வரவால் வாடி வனப்பிழந்து போனதைக் கண்டாள். அம் மலர்களையே பார்த்திருந்தவள் கருத்தைக் கரையி னின்றும் எழுந்த வண்டுகளின் ரீங்கார ஒலி ஈர்த்தது. அவள் பார்வை கரையை நோக்கிச் சென்றது. ஆங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/15&oldid=590092" இலிருந்து மீள்விக்கப்பட்டது