பக்கம்:நெய்தற் கன்னி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இ. புலவர் கா. கோவிந்தன்

-lഖഞങ്ങ அணுகச் சென்று நின்று, 'அன்ப இம்மணல் மேடும், இதன்மீது ஒடியும் உருண்டும் ஆடி மகிழும் இந் நண்டுகளும், இந் நண்டுகளின் கால்கள் ஈர்த்துச் செய்த இவ்வரிக் கோடுகளும் முறையே, ஆடஆட, மனம் கிளர்ச்சி கொள்வதல்லது சோர்வடைதல் செய்யாத சூதாடு களத்தையும், அக் களத்தில் உருட்ட உருட்ட உருண்டோடும் சூதாடு கருவிகளையும், அக்கவறுகள் உருண்டு உருண்டு ஓடியதால் வரி வரியாகத் தோன்றும் வடுக்களையும் உன் நெஞ்சிற்கு நினைவூட்டுகின்றனவோ? அத்துணை மெய்ம்மறந்து நின்று விட்டனையே!” எனக் கேட்டாள்.

அவ்விளைஞன் அப் பெண்ணை அறிவான்; அவள் அவ்விளைஞனின் காதலைக் கொள்ளை கொண்ட ஒருத்தியின் உயிர்த் தோழியாவள். இளைஞன் மீது காதல் கொண்டு களிப்புற்று வாழ்ந்த தன் தோழி, அவனைச் சின்னாட்களாகக் காண இயலாமையால் கலங்கித் துயர் உறுவதையும், பிறந்த நாள் தொட்டுக் கலக்கம் என்பதையே காணாதவள், சின்னாட்களாகக் கண்ணிரும் கம்பலையுமாக இருப்பது காணும் ஊராரும் உற்றாரும் அவள் களவில் மேற்கொண்டிருக்கும் காதலைக் கண்டு கொண்டு அவளையும், அவளுக்குக் காதல் நோய் அளித்துவிட்டுக் கவலையற்றுத் திரியும் அவனையும் அலர் கூறிப் பழிப்பதையும், அதனால் அவள் துயர் அளவிறந்து பெருகி அவள் நலத்தை அழிப்பதையும் அவனுக்குக் கூறி, அவ் வருத்தமெல்லாம் மறைய வேண்டின், அவன் அவளைப் பலர் அறிய மணந்து கொள்ளுதல் வேண்டும்; அதையும் மிக மிக விரைவில் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதை அவனுக்கு அறிவிக்கவே அவள் ஆங்கு வந்திருந்தாள். ・* ... . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/150&oldid=590227" இலிருந்து மீள்விக்கப்பட்டது