பக்கம்:நெய்தற் கன்னி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி & 149

வந்த இடத்தில் தன் தோழி! வருந்த வாராதிருந்த அவ்விளைஞன், அவளை வரைந்து கொள்ளும் கருத்தின்றியிருப்பதோடு, வரையாப் பெருநிதி சேர்க்கும் கருத்துடையனாய், அப்பொருள் கிடைக்கும் வெளிநாடு போவதற்கு வேண்டும் முயற்சி மேற்கொண்டிருப்பதையும் உணர்ந்தாள் தோழி. இளைஞன் உள்ளம் பொருள் வேட்கையில் ஆழ்ந்து போய் விட்டமையால், இது இன்ப நுகர்வை மறந்து கிடக்கிறது. அதனாலேயே அவன் அவளை மணந்து வாழ மனங்கொண்டிலன் என்பதையும் கண்டு கொண்டாள். இந்நிலையில் அவள் படும் துயரை எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் அவன் உள்ளம் அதை உணர்ந்து கொள்ளாது. பொருளிட்டுவதில் சென்ற ஆசை அழிந்தாலல்லது, இன்ப நுகர்ச்சியில் அதன் நாட்டம் செல்லாது. ஆகவே, அவ்வாசை அழிதற்காம் வழியினையே முதற்கண் அறிந்து மேற்கொள்ள வேண்டும் எனத் துணிந்தாள். உள்ளம் எந்த ஒரு பொருளின்பால் ஆசை கொண்டுளதோ, அப் பொருள் நிலையற்றது, எளிதில் அழியக் கூடியது, அதனால் அது குறித்துத் தான் படும் பாடெல்லாம் பயனிழந்து போம் என்பதை உணர்ந்து கொண்டால், உணர்ந்த அப்பொழுதே அதன்பால் ஆசை அற்றுப் போகும். இவ்வுண்மையை அவள் உணர்வாளாதலின், காதலை மறந்து, காதலி கண்ணிர் சொரியக் கலங்கி நிற்பதையும் கருதாது சென்று தேடிப் பெற நினைக்கும் செல்வத்தின் நிலையற்ற தன்மையினை இளைஞன் நெஞ்சு கொளக் கூற எண்ணினாள். - -

எண்ணியவள். அவன் காதலியின் தோழியாகிய - தனக்குச் செல்வ நிலையாமை போலும் சிறந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/151&oldid=590228" இலிருந்து மீள்விக்கப்பட்டது