பக்கம்:நெய்தற் கன்னி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அவர் தந்த நோய்!

"இவளுக்கு அறிவும் ஒழுக்கமும் ஊட்டி வளர்த்து உற்ற துணை புரியும் உயிர்த் தோழியாய் இருந்து காப்பாற்றுக!” எனப் பெற்றோரால் தன் பால் ஒப்படைக்கப் பட்டாளின் உடல் நலமும் உள்ள நலமும் அவள் கொண்ட காதல் நோயால் ஒருங்கே அழியக்கண்டு கலங்கினாள் ஒரு தோழி. அப் பெண்ணின் காதலன் ஒரு பெரும் வில்லாளன்; மாடு, மனை என மதிக்கத்தக்க வகை வகையான வளங் கொழிக்கும் பெரும் பொருளாளன்; நல்ல அழகாளன். அவன் ஆண்மை அழகு அளவிறந்த செல்வம் ஆகியவற்றைக் கண்டே அப்பெண் அவன்பால் காதல் கொண்டாள் என்பதை அறிந்த தோழி, அவர் காதலுக்கு வாழ்த்துக் கூறினாள். மேலும் அவனை அறிந்து, அவனோடு பழகிய சின்னாட்களுக்கெல்லாம், அவன் வாய்மை வழுவாதவன், நட்பு கோடற் கினிய நயம் உடையவன், அனைவர் உள்ளத்தையும் ஆட்கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/157&oldid=590234" இலிருந்து மீள்விக்கப்பட்டது