பக்கம்:நெய்தற் கன்னி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி © 159

நடிக்க வேண்டிய நாடகத்தை அவளும் சிறப்புற நடித்து முடித்தாள். அப்பெண்ணும் வாய்திறந்துவிட்டாள். தோழி! ஏடி பெண்ணே! பெண்டிர்க்குப் பெற்றதாயினும் சிறந்தது நாண், அந்நாணழிய வாழும் வாழ்வு வாழ்வெனப்படாது. ஆகவே, அந்நாணைக் காக்கும் நல்லெண்ணம் கொண்டாவது, உன் காதல் நோயைக் காட்டாது மறைத்துக் கொள்ளக் கூடாதோ! என்று நீ கடிந்துரைக்கின்றனை. தோழி! நாணைக் காத்துக் கொள்வது இந்நிலையில் என்னால் இயலாது. இது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டுவிட்டது. அதைக் காத்து நிறுத்தமுடியாத அளவிற்கு என் காதல் நோய் வளர்ந்து விட்டது. அந்நோயின் ஆற்றலொடு நோக்க என் உயிரே நனி மிகச் சிறியதாகி விட்டது. அதன் அழிவைக் காணும் நாளும் நெடுநாள் இல்லை. உயிரின் நிலைமையே இதுவாகவும், நாணழிவு குறித்து வருந்துகின்றனையே! காதல் நோயால் வருந்தித் துயர் உறுவது ஒரு நாளா, இரண்டு நாளா, எண்ணற்ற இரவுகளாக வருந்தி வாடுகிறேன். அவ்விரவுகளாவது துயர் பெருக்கும் துணைகளைப் பெறாது தனித்து வந்து வருத்துகின்றனவா? இல்லையே! துயர் பெருக்கும் துணைகளோடன்றோ வந்து வருத்துகின்றன: அவ்விரவு களின் அமைதியைக் கெடுத்து என் துயரைப் பெருக்கும் வண்ணம் ஓயாது ஒலிக்கும் அன்றில்கள்தாம் சிலவா? அம்மம்மா! பல பல. இவை தரும் தொல்லைகளால் அல்லல் உற்று அழும் என் அகத்துயர் மிகுதியால் என் புறநலனும், அழகிய உடலுறுப்புக்கள் சுருங்கியதால் அவ்வுறுப்புகளில் கிடந்து அழிகளித்த அணிகள் அனைத்தையும இழந்துவிட்ட என் தோற்றம், பேரழகு அளித்த பீலிகளை இழந்துவிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/161&oldid=590238" இலிருந்து மீள்விக்கப்பட்டது