பக்கம்:நெய்தற் கன்னி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இ புலவர் கா. கோவிந்தன்

மயில்போல் தோன்றித் துயர் விளைக்கின்றதே! மலர்ப் படுக்கையில் வீழ்ந்து கிடந்தும் என் உடல், செந் நெருப்பிடை வீழ்ந்ததுபோல் பற்றி எரிகிறதே! இவற்றிற் கெல்லாம் காரணம், நான் அவரோடு காதல் உறவு கொண்டு ஒரு நாள் நகைத்து விளையாடி மகிழ்ந்ததன் பயன் அல்லவோ?’ என்று கூறி நெடுமூச்செறிந்து நின்று துயர் உற்றாள்.

அவள் அவ்வளவு கூறி வருந்தியதே போதும். அதைக் கேட்டே அவன் அவள் துயர் நிலையை அறிந்து கொள்வன். மண முயற்சிகளில் ஆழ்ந்துவிடும் அவன் மனம், ஆனால், அவன் மனம் அம் முயற்சியில், ஆழப் பதிதல் வேண்டும். நனிமிக விரைவு காட்டுதல் வேண்டும் என விரும்பினாள் தோழி. அதனால் அப்பெண் தன் துயர் நிலையினை மேலும் வாய்விட்டுப் புலம்புவதில் விருப்பங் கொண்டு, "பெண்ணே ! காதலன் உன்பால் பேரன்பு கொண்டுளனே! பிரியேன் என உரைத்த அவன் உரை வளத்தை நீ உணர்ந்திலையோ? அவன், உன் செல்வ நிலைக்கேற்ற சிறப்புடையனல்லனோ? வகை மாண்ட செல்வ வாழ்வில் வாழ்பவன் அவன் என ஊரார் அவனை வாழ்த்துவதை நீ கேட்டிலையோ? உன் கண்ணொளி மகிழும் காட்சி நலம் கொண்டுள்ளவ னல்லனோ? இவ்வாறு எவ்வகையாலும் சிறப்புற்று விளங்குவான் ஒருவனைக் காதலனாகப் பெற்றமையால் களித்து மகிழ்வதல்லது கலங்கிக் கண்ணிர் விடுவது அழகோ" எனப் பொய்யே வினவினாள். அவ்வளவுதான், அவள் மீண்டும் புலம்பத் தொடங்கி விட்டாள்.

"தோழி! நம் காதலர் சிறந்த வில் வீரர்; ೨ುಗೆ கையில் ஏந்தி நிற்கும் வில் விரைந்து அம்பெய்ய வல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/162&oldid=590239" இலிருந்து மீள்விக்கப்பட்டது