பக்கம்:நெய்தற் கன்னி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புலவர் கா. கோவிந்தன்

அல்லரே! அப்படிப் பகைத்துப் பெருந்துயர் தரினும் நன்றாமே! அவர் பகைமை யுணர்வு கொள்வதால் நாம் கொள்ளும் வருத்தத்தினும், அவர் நட்புணர்வு மிக்கமையால் நாம் கொள்ளும் வருத்த மன்றோ நனிமிகக் கொடியதாகவுளது!

"தோழி! நம் காதலர்பால், மக்களைப் பற்றி வருத்தும் மன இருளை அகற்றும் பேரறிவும், அம் மக்களின் பகைவரைப் பாழாக்கும் பெருஞ்சினமும் உள என உலகோர் பாராட்டுவர். தோழி! அச் சினத்தியில் ஒரு சிறு பொறியினை என்பால் செலுத்தி என்னைச் சுட்டி எரிக்கினும் சால நன்றாம்! ஆனால் அவர் அது செய்திலர். பெண்ணே ! உன்னைப் பிரியேன்! என உரைத்து என் உள்ளத்தை அடிமை கொண்ட அன்பு அளிக்கும் அவர் சாயல் அன்றோ என்னை வருத்துகிறது! அவர் சினத்தீ யளிக்கும் நோயினும், அவ்வன்புச் சாயல் அளிக்கும் நோயன்றோ நனிமிகக் கொடுமை உடையதாய், நம்மால் தாங்கற்கரியதாய் உளது!

"தோழி! அவர் அளித்த காதல் நோய் நம்மால் தாங்கிக் கொள்ளும் அளவில் நில்லாது நனிமிகப் பெருகிவிட்டது. அந்நோயினின்றும் நீங்கி உயிர் வாழ்தல் நம்மால் இயல்ாது. அஃது அரிதினும் அரிதாம். ஆயினும், அவர் அளிக்கும் இன்ப வாழ்வை என்றேனும் பெறலாம் என்ற நம்பிக்கையால் நெஞ்சு அதைத் தாங்கி நிற்கத் தன்னாலான முயற்சிகளை முன்னின்று மேற்கொள்கிறது. ஆனால், தோழி! அவரோ நம்மை மறந்து, நமக்குத் துயரளிக்கத் துணிந்தவர் போலத் தோன்றுகிறார். அவர் அன்தக் கைவிட்டுப், போகும் நம் உயிரைப் போக விட்ாது காக்கவல்ல நல்ல மருத்துவராய் வந்து வாழ்வளிப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/164&oldid=590241" இலிருந்து மீள்விக்கப்பட்டது