பக்கம்:நெய்தற் கன்னி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ↔ #63

ர்ாயின், அந் நல்லெண்ண நெறியில் அவர் நெஞ்சு செல்லின், நனிமிக நன்றாம். தோழி! அந் நன்னின்ல நமக்கும் வந்து வாய்க்குமோ? வாய்க்குமாயின் அது எப்படி வாய்க்குமோ? என்று வாய்க்குமோ? அறியாது அழுது அழிகிறது என் உள்ளம் !" எனக் கூறிப் புலம்பினாள்.

தனக்கு வாழ்வளிக்கும் காதலியின் வருத்த நிலையினை, அவள் வாயுரை வழியே அறிந்த பின்னரும் இளைஞன் அவள் விரும்பும் மண வாழ்க்கையை மனங் கொள்ளாது, தன் உள்ளம் உவக்கும் களவின்பத்தையே கருதுவானல்லன். அத்துணைக் கொடியனல்லன் அவன். ஆகவே அவள் மணம் விரைவில் முடிய, மனத்துயர் மடியுமெனும் மனம் நிறைவுற்றாள் தோழி.

"அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்றுணர்தல், பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே பலவே யாமம், பையுளும் உடைய, சிலவே நம்மோடு உசாவும் அன்றில்? அழலவிர் வயங்கிழை ஒலிப்ப உலமந்து 5 எழில் எஞ்சு மயிலின் நடுங்கிச் சேக்கையின் அழலா கின்று அவர் நக்கதன் பயனே. மெல்லிய நெஞ்சு பையுள் கூரத், தம்

சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை வல்லவ்ன் தைஇய வாக்கமை கடுவிசை 10 வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை! வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் நகைமுதலாக நட்பினுள் எழுந்த - r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/165&oldid=590242" இலிருந்து மீள்விக்கப்பட்டது