பக்கம்:நெய்தற் கன்னி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இ. புலவர் கா. கோவிந்தன்

அத்தகையான், ஒரு நாள், பேரழகும், பெண்மை நலமும், பெருங்குடிப் பிறப்பும் வாய்ந்த பெண்ணொருத்தி யைக் கண்டு, அவள்பால் கொண்ட காதலால் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தான். இளமையும், இனிய பல பண்புகளும் அளித்திருந்த அவன் பேரழகு கண்டு அவளும் அவன்பால் காதல் கொண்டாள். காதலின்பம் நுகர்ந்து களிகூர்ந்தான் அவன். ஆனால் அவன் பெற்ற இன்பம், அவ்வொரு நாள் அளவே நின்றது. பின்னர் அவள் காண்டற்கரியளாயினள். கண்ணொளி கூச விண்ணில் தோன்றி மறையும் மின்னற்கொடி போலவும், காட்டி மறைக்கும் கனவுக் காட்சி போலவும் அவள் மறைந்து விட்டாள். அவளைக் கண்டது ஒரு முறையே: அவளோடு கலந்து உரையாடிக் களித்தது ஒரு கணப் பொழுதே. என்றாலும், அவள் அவன் நெஞ்சில் நிலையாகக் குடிபுகுந்து விட்டாள். அவளை மறப்பது அவனுக்கு இயலாதாயிற்று. அவள் அவன் உள்ளம் கவர்ந்த கள்வியாகி விட்டாள். அவன் நெஞ்சு அவளையே சுற்றிச் சுற்றிச் சுழல வட்டமிடலாயிற்று. -

நல்லதன் நலனையும், தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்ந்து, நன்னெறிக்கண் நின்று பழக வேண்டிய நெஞ்சு, இவ்வாறு அவன் வயத்ததாகாது, அவள் வயத்ததாகி விடவே, அவன் அறிவு செயலற்றுப் போய்விட்டது. அறிவு அடங்கி விடவே, அவன்பால் கடந்து அவனுக்குப் பெருமை அளித்த தன்னடக்கம், அவனை விட்டு அகன்றது. அவன் ஆசை அளவிறந்து பெருகி, வரம்பிகந்து ஓடலாயிற்று. நாண் எனும் நற்பணபும் அவன்பால் நில்லாது மறைந்தது. நல்லோன், நற்குணங்களுக்கோர் உறைவிடம் என்றெல்லாம் உயர்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/168&oldid=590245" இலிருந்து மீள்விக்கப்பட்டது