பக்கம்:நெய்தற் கன்னி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 167

தோரால் ஒரு காலத்தில் பாராட்டப் பெற்ற அவன், பண்பிலி எனப் பழிதுாற்றப் பெற்றான். பார்த்தவர் அனைவரும் அவனைப் பழிக்கத் தலைப்பட்டனர். ஆனால், அவன் அவற்றுள் எதையும் பொருட்படுத்திலன். அவள்பால் கொண்ட ஆசை ஆட்சி புரிய, அறிவிழந்து அலைந்து கொண்டிருந்தான்.

சின்னாட்கள் சென்றன. பித்தேறியவன்போல் திரிந்து கொண்டிருந்த அவன், பண்டேபோல், பண்புடை யவனாய்க் காணப் பெற்றான். அறிவுடைய பெரு மகனாய், அடக்கம் வாய்க்கப் பெற்றுக் காட்சி அளித்தான். காதல் நோயால் கருத்திழந்து அலைந்து கொண்டிருந்த அவன் நிலை கண்டு இரங்கியவர்கள், அவன் இன்று பழகும் பண்பாடு கண்டு பெருவியப் புற்றனர். அந்நோய் நீங்கி, அவன் நலம் உற்றது எவ்வாறோ என வியந்தனர். அவனோடு நெருங்கிப் பழகும் அன்புடையார் சிலர், அவன் நோய் தீர்த்த அருமருந்து யாது என அவனையே கேட்கவும் தலைப்பட்டனர்.

தன் நல்வாழ்வில் நாட்டம் கொண்டு, தன் நலம் வினவிய அப் பெரியோரை நோக்கிப், "பேரன்புடைய பெரியீர்! மின்னற் கொடி போலவும், கனவுக் காட்சி போலவும் தன் திருவுருவைக் காட்டி, என் உள்ளத்தில் "காதற் கனலை மூட்டி, என் நெஞ்சம் எனக்கு உரித்தாகாது, தனக்கே உரித்தாக அதை அடிமை கொண்டு மறைந்து விட்ட, அம்மலர்க்கொடியை அடையும் வழி யாது என அறியாது விழித்தேன். இறுதியில் வழியொன்று புலப் பட்டது. என் உள்ளத்தை அவள் கவர்ந்து கொண்டதை ஒருவரும் உணர்ந்திலர் என்ற துணிவினாலேயே அவள் என் காதலை ஏற்றுக் கொண்டிலள். அவளை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/169&oldid=590246" இலிருந்து மீள்விக்கப்பட்டது