பக்கம்:நெய்தற் கன்னி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இ. புலவர் கா. கோவிந்தன்

காதலிப்பதை, அவள் என் உள்ளத்தில் காதற் கனலை மூட்டி விட்டதை அவளுரார் அறியப் பறைசாற்றி விட்டால் என்னை ஏற்றுக் கொள்வள், என்பதை உணர்ந்தேன். மேலும் அவளுராரும், அவளைப் போலவே, காதலின் மாண்புணராதவராதலின், அவர்க்கு என் காதல் உள்ளத்தை நேரிய முறையால் எடுத்துக் காட்டினால் உணர்ந்து கொள்வார் என என் உள்ளுணர்வு உணர்த்தியதனால், அவர் உணர்ந்து கொள்ளும் வகையில் அதை அறிவிக்கத் துணிந்தது என் உள்ளம். அதனால் மடல் ஏறி மன்றம் செல்லத் துணிந்தேன்.

"பெரியோர்களே! என் உள்ளம் அம் முடிவிற்கு வந்தவுடனே, பனை மடல்களைக் கொண்டு குதிரை ஊர்தி ஆக்கினேன். பூளை, ஆவிரை, எருக்கு முதலாம் மலர்களைப் பறித்துக் கொணர்ந்தேன். அவற்றை, நீலமணியின் நிறம் காட்டும் மயிற் பீலியை இடைவிட்டு மாலையாகத் தொடுத்து, அம்மடல் மாவிற்குச் சூட்டினேன். அம்மாவோடு அவளுர் மன்றை அடைந்தேன். வண்ணங் கொண்டு தீட்டிய அவள் வடிவம் அமைந்த கிழியைக் கையில் ஏந்தியவாறே அம்மடல் மாமேல் ஏறி அமர்ந்தேன். அக்காட்சி, அவ்வூர்ச் சிறுவர்களை ஒன்று கூட்டிவிட்டது. கூட்டங்கூட்டமாய் வந்து என் குதிரையைச் சூழ்ந்து கொண்டும், ஈர்த்துச் சென்றும் எள்ளி நகைத்தனர். அவர் செய்த ஆடல் ஆரவாரத்தால், அவ் வூர்ப் பெரியோர்களும், அப் பெண்ணிற்கு உறவானவர் சிலரும் வந்து என் மாவைச் சூழ்ந்து கொண்டனர். உடனே, ஊர்ப் பெரியோர்களே! இதோ என் கையில் பிடித்த கிழியில் காட்சியளிக்கும் இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/170&oldid=590247" இலிருந்து மீள்விக்கப்பட்டது