பக்கம்:நெய்தற் கன்னி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 171

இருந்தவாறு என்னே!” எனப் பலப் பல கூறிப் பாடத் தொடங்கி விட்டேன். -

"என் ஆட்டத்தையும் பாட்டையும் அவள் அறிந்து கொண்டாள். தன்னால் காதலிக்கப் பெற்ற ஒருவன்.' இவ்வாறு கலங்குவது தன் பெண்மைக்குப் பெருமை யாகாது என உணர்ந்தாள் போலும். உடனே, ஊர் மன்றடைந்து, உலகத்து உயிர்களை உயர்நிலையில் வாழவைக்க வேண்டும் என்ற அன்புள்ளம் கொண்டு, அதற்காகத் தம் அகத்து எழும் ஆசைகளை அடக்கி, அதனால் அரிய காட்சி நலம் உடையராய் உயர்ந்த தவநெறி மேற்கொண்ட பெரியோர், அத்தவப் பயனாய்த் தம் உடம்பைக் கைவிட்டு உம்பர் உலகு அடைதல் போல், காம நோயால் கலங்கிய காலத்தில் கைவிடமாட்டாப் பெருந்துணையாய் நின்று காத்த இம் மடல்மா, இன்று இவன் இவளைத் தன் காதலியாகக் கைப்பற்றிக் கொண்டு இன்ப வெள்ளத்துள் இருந்து மகிழப் போவதால் இவனை விட்டு நீங்குக! இவன் அருகே இடம் பெறாது அகன்று அழிக என அருள் உள்ளம் கொண்டு, அன்பு கலந்த உரை களை உரைத்து என்னை ஆட்கொண்டாள். அதனால், யானும் பித்தம் தெளிந்து பண்டே போலும் பண்புடை யேன் ஆயினேன்!” என விளக்கம் அளித்து, அவர் வியப்பினை அகற்றினான்.

"எழில் மருப்பு எழில்வேழம் இகுதரு கடாத்தால் தொழில்மாறித் தலைவைத்த தோட்டி கைநிமிர்ந்தாங்கு அறிவும் நம்அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு வறிதாகப், பிறர் என்னை நகுபவும் நடுவுடன் மின்அவிர் நுடக்கமும், கனவும் போல் மெய்காட்டி 5 என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனிவெளவித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/173&oldid=590250" இலிருந்து மீள்விக்கப்பட்டது