பக்கம்:நெய்தற் கன்னி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இ புலவர் கா. கோவிந்தன்

தன் நலம் கரந்தாளைத் தலைப்படுமாறு எவன் கொலோ?

மணிப்பீலி சூட்டிய நூலொடு, மற்றை அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து மல்லல்.ஊர் மறுகின்கண் இவள்பாடும் இஃது ஒத்தன்; எல்லீரும் கேட்டிமின் என்று; படரும், பனைஈன்ற மாவும் சுடரிழை நல்கியாள் நல்கி யவை;

பொறைஎன் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த நிறைஅழியக் காமநோய் நீந்தி அறைஉற்ற உப்பியல் பாவை உறைஉற்றது போல உக்குவிடும் உன் உயிர்;

பூளை, பொலமலர் ஆவிரை, வேய்வென்ற தோளாள் எமக்கு ஈத்தபூ:

உரிது என்வரைத்தன்றி ஒள்ளிழை தந்த பரிகழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த நெய்யுள் மெழுகின் நிலையாது பைபயத் தேயும், அளித்து, என் உயிர்;

இளையாரும், ஏதிலவரும், உளைய யான் உற்றது உசாவும் துணை;

என்றுயான் பாடக் கேட்டு அன்புறு கிளவியான் அருளிவந்து அளித்தலின் துன்பத்திற் றுணையாய மடல், இனி இவட்பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள், அன்புற்று அடங்கரும் தோற்றத்து அருந்தவம் முயன்றோர் தம் உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.”

10

15

20

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/174&oldid=590251" இலிருந்து மீள்விக்கப்பட்டது