பக்கம்:நெய்தற் கன்னி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 173

மடல் ஊர்ந்து தலைவியை எய்தியதனைத் தலைவன் தன் பாங்காயினார்க்குக் கூறியது.

1. இகுதரு - சொரியும், கடாம் - மதநீர், 2. தொழில் மாறி - ஏவிய தொழில்களைச் செய்ய மறுத்து, தலைவைத்த - அடக்கி ஆளும்; தோட்டி - அங்குசம், கைநிமிர்ந்தாங்கு - கை கடந்தாற் போல். 5. அவிர் - விளங்குகின்ற. 7. தலைப்படுமாறு - அடையும் வழி, 9. பிணித்து - தொடுத்து யாத்து - சூட்டி 10, இஃது ஒத்தன் - இவன் ஒருவன்; 12. படர் - காம நோய். 13. நல்கியாள் - என்னால் விரும்பப்பட்டவள். 14. பூநுதல் - அழகிய நெற்றி 15. அறை - உப்புப்பாத்தி, 16. உப்பியல்- உப்பால் ஆன உறை- மழைத்துளி. 17. உக்குவிடும் - அழிந்துவிடும். 18: வேய் = மூங்கில், 21. பரிகழிஇயல்புகள் அழிதற்குக் காரணமான, பைதல் நோய் - காமநோய். 24. உளைய - வருத்த 25. உசாவும் - வினவும். 29. இடம்படல் - இடம்படாது ஒழிக. 30 அடங்கு அரும் தோற்றம் - மன அடக்கம் உற்றதால் பெற்ற அரிய வடிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/175&oldid=590252" இலிருந்து மீள்விக்கப்பட்டது