பக்கம்:நெய்தற் கன்னி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தீர்த்தல் நும் கடனே

தேன்போல் தித்திக்கும் மொழி, பிறைத் திங்கள் போல நெற்றி, முல்லை அரும்புகளோ என் மருளும் வெண் பற்களின் வரிசைக்கிடையே தோன்றும் இள முறுவல்; இத்தகு இயற்கை நலம் உடையாள் ஒருத்தி தான் பிறந்த குடியின் பெருஞ்செல்வ வாழ்விற்கேற்ப வகை வகையான அணிகள் அணிந்து அழகின் திருவுருவாய்க் காட்சி அளித்தாள். அவள் உருவும் திருவும் கண்டு, அவள் அறிவும் அருங்குணமும் அறிந்து, அவள் மீது காதல் கொண்ட ஒர் இளைஞன், அக்காம வெறியால் தன்னை மறந்தான்; நற்குடிப் பிறப்பும் நற்பண்பும் மிக்க நல்லோனாய அவன் நாணைக் கைவிட்டான்; குடிப் பெருமையைக் குன்றவிட்டான்; இரவு பகல் எப்பொழு தும் அவளையே நினைத்து வருந்தினான்; காதல் மிகுதி யால், கருத்திழந்து போனமையால், தான் அவளைக் காதலிப்பதுபோல், அவளும் தன்னைக் காதலித்தல் வேண்டும்; அவ்வாறு அவளும் காதலித்த வழியே அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/176&oldid=590253" இலிருந்து மீள்விக்கப்பட்டது