பக்கம்:நெய்தற் கன்னி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ↔ 177

"என்னை வழி மறித்து நிறுத்திய பெரியோர்களே! உங்களை நோக்க, நீங்கள் இவ்வூர்ச் சான்றோர் போலத் தோன்றுகின்றீர். நீங்கள் உண்மையில் சான்றோராயின், சான்றோர்க்குரிய கடமைகளுள் சிலவற்றை உமக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். பிறர்க்கு வந்த நோயைத் தமக்கு வந்த நோயாகக் கருதித், தம்மால் ஆவன அனைத்தையும் செய்து, அவர் நோயைப் போக்கி, அவரை வாழ வைத்தல் ஆன்றோர்க்கு அறமாம் என்ப. ஆன்றோர் கடன் இது என்பதை அறியும் அறிவு உங்கள்பாலும் பொருந்தியிருப்பின், உமக்கு என் குறைகளை விளங்க எடுத்துக் கூறுகிறேன். கேட்டு அது தீர்த்து எனக்கு வாழ்வளியுங்கள்" என அறிவித்துவிட்டுத் தான் காதல் கொண்டதை, அக்காதல் நோயால் தான் உற்ற துயரை எடுத்துரைக்கத் தொடங்கினான். -

"பெரியோர்களே! பெருமழை பெய்யும் கருமேகத்தி னிடையே தோன்றி மறையும் மின்னல் போல், இவ்வூரைச் சேர்ந்த ஒரு பெண், என் வாழ்வில் திடுமெனக் குறுக்கிட்டு மறைந்துவிட்டாள். அப்புற நலங்களால் சிறந்து விளங்கிய அவள் என் சிந்தையைத் தன் இருப்பிடமாகக் கொண்டு விட்டாள்; அவளை அவ்விடத்தினின்றும் ஒரு நாழிகைப் பொழுதும் அப்புறப்படுத்த இயலவில்லை. அவள் என் நெஞ்சில் இடங்கொண்ட அன்று என்னை விட்டு அகன்ற உறக்கம் இன்றுவரை என்னை வந்தடைந்திலது. அக்காம நோயால் மிக வருந்தும் என் உள்ளம், அந்நோயினின்றும் சிறிதே விடுதலை பெற்று அமைதி காணும் வழியாக, இம் மடலேறலினை மனத்துட் கொண்டேன். அதனால் அதற்கு வேண்டுவனவற்றோடு இவண் வந்து சேர்ந்தேன். பெரியார்களே! என் மடல் மாவைச் சிறிதே நிறுத்தி, என்

நெய்தல்-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/179&oldid=590256" இலிருந்து மீள்விக்கப்பட்டது