பக்கம்:நெய்தற் கன்னி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 179

வந்த அப்படை, காண்பவர் அனைவரும் என்னை எள்ளி நகைக்கும் வண்ணம், என்னைத் தாக்கி, நாண் எனும் என்னுடைய நற்பண்பை முற்றி வளைத்து அழித்து விட்டுப், பின்னர் என் அகத்துட் புகுந்து என் உள்ளுணர்வையும் அழித்து விட்டது; பெரியோர்களே ! காம நோயாகிய அக்கொடிய பகைவன், இவ்வாறு அழகு முதலாம் என் புற நலங்களையும், அறிவு முதலாம் அக நலங்களையும் அழித்துவிடவே, பாராட்டத்தக்க பண்டை நிலை இழந்து நிற்கும் எளியேனுக்கு, எழில் மிக்க நுதலினையுடையளாய அந்நங்கை நல்லாள் அளித்த இம்மடல்மா, அப்பகையால் அழிவுறாது, உட்புகுந்து 'உயிர்காத்துக் கொள்ளும் அரணாய் அமைந்து காக்கிறது.

"பெரியோர்களே! முல்லை அரும்பினை ஒக்கும் அவள் பற்களுக்கிடையே தோன்றும் நகையழகைக் கண்டு கருத்திழந்து அவளை அடைக்கலமாய் அடைந்துவிட்டது என் நெஞ்சு-அவளை விட்டுப் பிரிய மாட்டாது அவளையே சுற்றிச் சுற்றி வந்து உழலும், அந்நெஞ்சைப் பற்றி வருத்தும் இக்காம நோய், என் உயிரை அறவே அழித்து விடாது, இருந்து வருந்துமாறு சிறுகச் சிறுக எரிகின்றது. அந்தோ! அதன் கொடுமையை நான் எங்ங்ணம் ஆற்றுவேன்! பெரியோர்களே! இப்பெண் அளித்த இக்காமக் கொடு நோய் அழல் போல் அறக் கொடிது என்றால், அவள் அளித்த இம் மடல்மா, அவ்வெரியினின்றும் பிழைத்தார் நின்று பேரின்பம் நுகர்தற்காம் நிழலாய்த் துணைபுரிகிறது.

"பெரியோர்களே! இதுவே என் நிலை. எந்நோயின்

நிலை இது என்பதை நீங்கள் இப்போது அறிந்திருப்பீர்கள். அறிந்து கொண்டீராயின், தவம் செய்து, துறக்க இன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/181&oldid=590258" இலிருந்து மீள்விக்கப்பட்டது