பக்கம்:நெய்தற் கன்னி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இ. புலவர் கா. கோவிந்தன்

பெறுதற்கு உரியோனாய அரசன் ஒருவன், அத்தவ நெறியை மறந்து, துறக்க இன்பத்தைப் பெறலாகும் வாய்ப்பினை இழந்து போவதைக் காணும் சான்றோர், அவனுக்கு வேண்டும் அறிவுரை கூறி, அவனை அப்பிழை நெறியினின்றும் நீக்கி, நன்னெறிக் கண் உய்த்து, அவனை அவன் அடைய வேண்டிய துறக்க இன்பத்தில் கொண்டு நிறுத்துவது போல், நான் உற்று வருந்தும் என் காமநோயை அகற்றிக் காதலின்ப வெள்ளத்தில் வீழ்ந்து கரை காணும் கருத்தின்றிக் கிடந்து மகிழ்தற்காம் வழி வகைகளை அறிவித்து, என்னை வாழ்விப்பீராக!” என வேண்டிக் கொண்டான்.

"சான்றவீர்! வாழியோ! சான்றவீர் என்றும் பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ்விருந்த சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்; மான்ற துளியிடை மின்னுப்போல் தோன்றி ஒருத்தி 5 ஒளியோடு உருவு என்னைக்காட்டி, அளியள் என் - நெஞ்சாறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்; அணியலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் பிணையல் அம்கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப ஒங்கு இரும்பெண்ணை மடல் ஊர்ந்து என் எவ்வநோய் 10 தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக - விங்கிழை மாதர்திறத்து ஒன்று நீங்காது. பாடுவேன் பாய்மா நிறுத்து. -

யாமத்தும், எல்லையும் எவ்வத்திரை அலைப்ப - மாமேலேன் என்று மடல்புனையா நீந்துவேன் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/182&oldid=590259" இலிருந்து மீள்விக்கப்பட்டது