பக்கம்:நெய்தற் கன்னி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 181

தேமொழி மாதர் உறாஅது உறீஇய

காமக் கடலகப் பட்டு

உய்யா அருநோய்க்கு உயலாகும், மையல் உlஇயாள் ஈத்த இம்மா,

காணுநர் எள்ளக் கலங்கித் தலைவந்து என் 20 நாண் எழில் முற்றி உடைத்து உள்அழித் தரும், மாணிழை மாதராள் ஏர் எனக் காமனது ஆணையால் வந்த படை, காமக்கடும் பகையில் தோன்றினேற்கு ஏமம் எழில்நுதல் ஈத்த இம் மா. 25

அகையெரி ஆனாது என் ஆருயிர் எஞ்சும் வகையினால் உள்ளம் சுடுதரும் அன்னோ!

முகை ஏர் இலங்கு எயிற்று இன்னகை மாதர் தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!

அழல்மன்ற, காமஅருநோய்; நிழல்மன்ற, 30

நேரிழை ஈத்த இம்மா.

ஆங்கதை,

அறிந்தனிராயின், சான்றவிர்! தான் தவம்

ஒரீஇத், துறக்கத்தின் வழிஇ, ஆன்றோர்,

உள்ளிடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் 35

உயர்நிலை உலகமும் உlஇயாங்கு, என்

துயர்நிலை தீர்த்தல் நும் தலைக் கடனே.”

மடல் ஏறுகின்ற தலைவன் சான்றோர்க்குக் கூறியது.

4. மான்ற - ஒன்றொடொன்று கலந்து பெய்யும். 5. துளி - மழை. 6. ஒளி - அறிவு முதலாம் புகழ். 7. நெஞ்சாறு கொண்டாள் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/183&oldid=590260" இலிருந்து மீள்விக்கப்பட்டது