பக்கம்:நெய்தற் கன்னி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ళ #87

அவளுக்கு அடிமைப்பட்டு விட்டேன் என்பதை அவளுக்குக் காட்டவே ஆங்குச் செல்கிறேன்; அதற்காகவே இத்திருக்கோலமும் கொண்டுள்ளேன். என் நிலை காணும் நீவிர், இப்படியும் ஓர் இளைஞன் இருப்பனோ என எண்ணி, என்னைக் காணவும் நாணாதீர்கள். அப்படியாகி விட்டேன் நான். அந்த வழிக்கு வந்தவன் நான். என் செய்வேன்? பெரியோர் களே! இவ்வாறு ஆகிவிட்டேன் நான். இவ்வாறு கெட்டுவிட்டது என் அறிவும். என்றாலும், நீங்கள், நான் பாட வேண்டும் என்று விரும்புவீராயின், எப்படியாவது பாடுகிறேன். ஆடு என்று நீங்கள் ஆணையிட்டால் அவ்வாறே ஆடுகிறேன். எங்ங்னமாவது தங்கள் ஆணையை நிறைவேற்ற வல்லேன். பெரியோர்களே! நான் கொண்ட இக் காமநோயைப் போக்கும் மருந்தாக என் காதலியாகிய நும் ஊர்ப் பெண் அளித்த இம் மடல் மாவைச் சிறிது பாடட்டுமா?” என்று வினவினான்.

அவன் அவ்வாறு வினவியும், அவர்கள் வாய் திறந்திலர். அவனை விழித்து நோக்குவதையும் கைவிட்டிலர். அதனால் அவனுக்கு அவர்பால் சினம் மிகவே, அவர்க்கு அவர் செய்யத் தவறிய கடமைகளை நினைவூட்டத் துணிந்தான். உடனே, "பெரியோர்களே! திங்களைப் பாம்பு கெளவிக் கொண்டது போலும் காட்சி வானத்தில் அவ்வப்பொழுது தோன்றுவதை நீங்களும் கண்டிருப்பீர். அக் காட்சியைக் காணும் சான்றோர், பாம்பால் திங்கள் துயர் உறுவது இல்லையாகவும், அவர் நல்லுள்ளத்தின் பயனாய்த் திங்களுக்குப் பாம்பால் பெருந் துன்பம் நேர்ந்து விட்டதாக நினைப்பர். நினைக்கும் அவர்களால், திங்களை அணுகி அதன் துயர்போக்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/189&oldid=590266" இலிருந்து மீள்விக்கப்பட்டது