பக்கம்:நெய்தற் கன்னி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆ. புலவர் கா. கோவிந்தன்

செவ்வழியாழ் நாம் பண்ண கிளவியார் பாராட்டும் 15 பொய்தீர்ந்த புணர்ச்சியுள் புதுநலம் கடிகல்லாய், மாலை நீ, நகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்

- ஆர்ப்பப் பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்; தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை முகைமுகம் திறந்தன்ன முறுவலும் கடிகல்லாய்: 20 என வாங்கு,

மாலையும் அலரும் நோனாது எம்வயின் தெஞ்சமும் எஞ்சும் மன்தில்ல; எஞ்சி உள்ளாது அமைந்தோர் உள்ளும்; - உள்இல் உள்ளம் உள்உள் உவந்தே." 25

தலைவன் பிரியத் தனித்திருக்கும் தலைவி மாலை கண்டு புலம்பியது.

2. நடுக்கற-தீவினையால் உளதாகும் மன நடுக்கம் இன்றி 3. துறக்கம்-வீட்டுலக வாழ்வு; வேட்டு-விரும்பி, 4. ஆற்றி-செய்து, 5.ஆனாது.அமை காணாது, கலுழ் கொண்ட வருந்திய அவன்-அந்த அரசன். 6. ஏனையான்-இளவல்; 8. இறுத்தந்ததங்கிய, 9. தூ-துயர் தாங்கும் வன்மை; கயம்-குளம். 10. குவிந்த-ஆழிந்த 11. ஆய்சிறை-அழகிய சிறகு, தளைவிட்டமலர்ந்த 12. காரிகை-அழகு; கடிகல்லாய்-போக்கமாட்டாய்.14.பை என்ற-துயர் மிகுதியால் வலியிழந்த, 19. தகை-அழகு; சினை-கிளை பதி-கூடு. 20. முகை-அரும்பு; முகம் திறத்தல்-மலர்தல்; முறுவல்-நகை. 23. எஞ்சும்-நீங்கும். 24. உள்ளாது-நினையாது; உள்ளும்-நினைக்கும் 25. உள் இல்உள்ள்ே தெளிவு இல்லாத, உள்ளம்-உள்ளத்தால், எஞ்சி உள்இல், உள்ளத்தால் உள்ளாது அமைந்தோரை, உள் உள் உவந்து உள்ளும் எம்பயன் நெஞ்சமும் மாலையும் அலரும் நோனாது எஞ்சும் மன் எனக் கூட்டுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/19&oldid=590096" இலிருந்து மீள்விக்கப்பட்டது