பக்கம்:நெய்தற் கன்னி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 இ. புலவர் கா. கோவிந்தன்

போக்கும் வழி யாது என்பதை ஆராய்ந்து, அவ்வழியை விரைந்து மேற்கொள்வதே ஆம். அந் நல்லுள்ளம் உங்கள்பால் உண்டேல், என் அறிவை மயக்கும், என் மனத்தை மருட்டும் இக் காமநோய் என்னை விட்டு அகலச் செய்யுங்கள். அதைப் போக்கவல்ல மருத்துவம் அறிந்தவள், உங்கள் ஊர்ப் பெண்ணே ஆவள். அவள் உள்ளத்தில் அந்நல்லுணர்வு தோன்றுமாறு செய்வ தொன்றே நீங்கள் செய்ய வல்ல நற்றொண்டாம். அதைச் செய்யின், உங்களுக்கு அறப் பயனோடு புகழ்ச் சிறப்பும் உண்டாம். ஆன்றோர்களே! அந் நற்பணியை, இன்றே, இப்போதே செய்து எனக்கு வாழ்வளிப்பீராகுக!” என வேண்டிக் கொண்டான்.

“கண்டவிர் எல்லாம் கதுமெனவந்து ஆங்கே பண்டறியா தீர்போல நோக்குவீர்; கொண்டது மாஎன்று உணர்மின், மடல்அன்று; மற்றுஇவை பூஅல்ல; பூளை உழிஞையோடு யாத்த புனவரையிட்ட வயங்கு தார்ப்; பீலி 5 பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி

அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி, நெடியோன் மகன் நயந்து தந்தாங் கனைய வடிய வடிந்த வனப்பின் என்நெஞ்சம் இடிய இடைக்கொள்ளும் சாயல் ஒருத்திக்கு 10 அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்; அன்னேன் ஒருவனேன் யான்; .

என்னானும் பாடு எனில்பாடவும் வல்லேன், சிறிது ஆங்கே

ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ? என்னுள் இடும்பை தணிக்கும் மருந்தாக 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/192&oldid=590269" இலிருந்து மீள்விக்கப்பட்டது