பக்கம்:நெய்தற் கன்னி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கொடுத்தார் தமர்

புறப்பகை அகப் பகைகளாய இருவகைப் பகையும் அற்றது பாண்டி நாடு. பாண்டியவரின் படை வளம், அந் நாட்டின்பால் பகை கொண்டிருந்தாரைப் பணிந்து திறை கொடுத்துப் பகையொழித்து வாழப் பண்ணிற்று. அந்நாடு பெற்றிருந்த ஆன்றோர்ச் செல்வம், ஆகூழ் இழந்து, ஒரோவொருகால், அறநெறியில் பிறழ்ந்து விடுவார் சிலரையும், தன் பெருமையால் பண்டேபோல் பேரற

நிலையில் வாழப் பண்ணும்.

அறக் கேடோ, பொருட் கேடோ, இன்பக் கேடோ அறியாப் பெருமை மிக்க அப் பாண்டி நாட்டில், இளைஞன் ஒருவன் வாழ்ந்திருந்தான். பாண்டி நாட்டுப் பெருங்குடி மக்கள்பால் பொருந்தியிருக்க வேண்டிய பண்புகளெல்லாம் அவன்பால் பொருந்தியிருந்தன. அவன் ஓர் ஆற்றல் மிக்க பெரு வீரன். களம் புகுந்தால், பகைவர் படை மீது அஞ்சாது பாய்ந்து அழிக்கவல்ல குதிரையே அவன் கண்முன் தோன்றும். எவரும் ஏற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/194&oldid=590271" இலிருந்து மீள்விக்கப்பட்டது