பக்கம்:நெய்தற் கன்னி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ళీ 193

அஞ்சும் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டால், அது அவனுக்கு அடங்காது, தான் விரும்புவது போல் திரிந்து கொடுக்காது, அவன் ஆட்டுமாறெல்லாம் ஆடி, அவனுக்கு வெற்றிப் புகழைத் தேடி அளிக்கும். களத்தில் இரக்க உள்ளம் இழந்து, போர் வெறி கொண்டு அலையும் அவன் அருளை அறியாதவனல்லன். அமரின் போது கல்லினும் வல்லிதாய்த் தோன்றும் அவன் உள்ளம், இல்லாமையால் தன் முன் வந்து இரந்து நிற்பாரைக் காணின், நெருப்பிடை வீழ்ந்த நெய்யினும் மெல்லிதாய் நெகிழ்ந்து விடும். அவன் ஒரு பெருங் கொடையாளி. உலகமே திரண்டு வரினும் உதவத் தவறான். அதற்கு ஏற்ப, உலகத்து உயிர்களுக் கெல்லாம் உணவளித்து ஒம்புதற் கேற்ற ஊக்கம் மிக்கது அவன் உள்ளம். ஆற்றல், அறம் ஆகிய இரு பெரும் பண்பு களால் பெருமையுற்ற அவன்பால், அறிவுச் செல்வமும் ஆரப் பொருந்தியிருந்தது. சொல் வளம் அறிந்து, பயன் நிறைந்தனவும், பண்பு மிக்கனவும் ஆய சொற்களையே வழங்கவல்ல பேரறிவாளர் நிறைந்துள்ள அவையிடையே நின்று, அவர்களும் வியக்கும் வகையில் தான் கற்ற கல்விப் பொருளை வகைப்படுத்தி உரைக்கும் உயர்ந்த கல்வி வளம் அவன் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பாய்ந்தது.

இவ்வாறு, அறிவாலும் திருவாலும் ஆற்றலாலும் சிறந்திருந்த அவன், மக்கட் பிறவி எளிதில் வாய்க்கலாகா மாண்புடையது, அது பெற்றார், அப் பிறவியால் பெற்ற பெருவாழ்வை மேலும் மாண்புடையதாக்கும் நல் லொழுக்க நெறியில் நிற்க வேண்டுமே யல்லாது, அதற்கு மாறுபட்ட நெறியில் சென்று மாண்பிழந்து போதல் கூடாது; அவ்வறிவு வாய்க்கப் பெற்றவர், அறம், பொருள். இன்பம் ஆகிய மூன்றையும் அளிக்க வல்ல ஆக்கச்

நெய்தல்-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/195&oldid=590272" இலிருந்து மீள்விக்கப்பட்டது