பக்கம்:நெய்தற் கன்னி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 195

இயலா அக் கொடி மின்னல் போல், அவனால் அடை தற்கு அரியளாயினாள்.

அவள் அரியள் என்பதை அறிந்தும், அவள்பால் கொண்ட காதலை அவன் கைவிட்டிலன். மாறாக, அது அளவிறந்து வளர்ந்து பெருகிற்று. அவன் உள்ளம், காதல் 'உணர்வால் நிறைந்து விடவே, அவன் அறிவிழந்த வனானான்; ஆற்றல் இழந்தவனானான்; அருளை மறந்தது அவன் மனம். மடல் ஏறி மன்றம் புகவும், கண்ணிற் படுவார் ஒவ்வொருவரிடத்திலும், தன் காதல் நோயைக் கூறி, அந்நோய் தீர்த்துத் துணை புரியுமாறு இர்ந்து வேண்டிக் கொள்ளவும் துணிந்து விட்டது அம்மனம். அவ்வாறே, ஒரு நாள், அவன் மடன் மாவோடு, அவளுர் மன்றம் அடைந்து, மடல் ஏறி மாண்பிழந்தான். அவனை அந்நிலையில் சிலர் கண்டனர். பாண்டி நாட்டுப் பண்பாட்டுப் பெருமையினைப் பாராட்டும் பேருள்ளம் படைத்தவர், அப்பெரியோர். பகைவர் வந்து பணிந்து திறைதரப் பெற்றுப் பகை யொழித்துப் பாராளும் பாண்டியன் பெருமையை அப்பொழுதுதான் பார்த்துத் திரும்பிய அவர்கள், அப்பாண்டி நாட்டில், இத்தகைய அறமல்லாச் செயல் நிகழக் கண்டு, பாண்டி நாட்டின் பெருமைக்கும் இழுக்கு வந்துற்றதே என எண்ணி இரங்கினர். அவ்வெண்ணத்தில் ஆழ்ந்து பாண்டி நாட்டின் புகழ்க் கேடு குறித்துக் கண்ணிர் விட்டுக் கொண்டிருக்குங்கால், அவ்வூர்ச் சான்றோர் சிலர் ஆங்கு வந்தனர். வந்தவர்கள் இளைஞனை அணுகி, மக்கட் பிறவியின் மாண்பை மறந்து மடல் ஏறி அறமல்லாதன புரியும் அவன் அறிவு கெட்ட நிலை கண்டு வெகுண்டு, வெறுத்தனர். ஆனால் இளைஞன் அது குறித்துக் கவலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/197&oldid=590274" இலிருந்து மீள்விக்கப்பட்டது