பக்கம்:நெய்தற் கன்னி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 புலவர் கா. கோவிந்தன்

புற்றில்ன். மாறாக, அறநெறி வாழ்வளிக்கும் விழுமிய சிறப்பினைத் தனக்கு உரைக்க வல்ல சான்றோர்க்குக், குதிரை ஊர்ந்து களம் புகுந்து போரிட்டுப் புகழ் நாட்ட வல்ல பேராண்மை, உலகமே வறுமையுறினும், அதுகண்டு உளம் கலங்காது, அவ்வுலகனைத்திற்கும் உணவளித்து ஒம்பவல்ல ஊக்கமும் உரமும் வாய்ந்த உள்ளம், கல்வியில் வல்லாரும் கண்டு வியக்குமாறு சொல்லாட வல்ல கல்விச் செல்வம் முதலாம் சிறப்புக்களை ஒருங்கே பெற்றிருந்த தன் பண்டைப் பெருமையினையும், அப் பெருமை யனைத்தும் அறவே அழிந்து போக, மடல்மா ஏறி மன்றில் உலாவவும், ஒருவரை அடுத்து இருகை ஏந்தி இரக்கவும், கல்லாரும் எள்ளி நகைக்கவும், தன்னைக் காதல் நோய்க் கடலில் ஒருத்தி தள்ளி விட்டதையும் விளங்கக் கூறினான்.

தன் பண்டைப் பெருமைகளை, அவற்றை இழக்கப் பண்ணிய காதல் நோயை, அக்காதல் நோயை அளித்து விட்டுக் காண்பதற்கும் அரியளாகி மறைந்து விட்ட அவ்வூர்ப் பெண்ணை, அவள் பேரழகு நிலையைக் கூறிய இளைஞன், அந்த அளவோடு நின்றிலன். அவன் பெற்று வருந்தும் காதல் நோய், அவனை அந்த அளவோடு விட்டிலது. காதல் நோய் மிகுதியால் கருத்திழந்து கிடப்பதால், "சான்றோர்களே! மக்கட் பிறவி பெறுதற் கரிய பெருமை யுடையது என்பதை அறிவேன். மக்கட் பிறவி வாய்க்கப் பெற்றவர், அறம், பொருள், ன்பங்களைப் பயக்கும் அருஞ்செயல்களையே ஆற்றுதல் வண்டும் என அறநூல்கள் கூறுகின்றன. என்பதையும் அறிவேன். சான்றோர்களே! அவ்வற நூல்கள் மற்றொன்றையும் அறிவித்துள்ளன; அதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அதை நான் அறிவேன். மக்களாய்ப் பிறந்தவர், அறம், பொருள், இன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/198&oldid=590275" இலிருந்து மீள்விக்கப்பட்டது