பக்கம்:நெய்தற் கன்னி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 197

பயப்பனவே ஆற்றுதல் வேண்டும் எனக் கூறும் அவ்வற நூல்களே, அம்மக்கள், யாதோ ஒரு காரணத்தால் தம் இயல்பு கெட்டு இயங்கும் காலத்தில், தம் மனம் போனபடி யெல்லாம் திரிந்து, தாங்களும் மாண்பிழந்து போவதோடு, அவ்வாறே திரியுமாறு பிறர்க்கும் அறிவுறுத்தி, அறம் பொருள், இன்பம் ஆகிய இவற்றுள் எதன்பாலும் சாராப் பயனற்ற செயல்களைச் செய்யவும் உரிமையுடையவராவர். அவ்வகையால் காதல் கைகூடப் பெறாது வருந்தும் இளைஞர், இவ்வாறு மடலூர்ந்து மன்றில் திரிவதும் இழுக்கில்லை என்றும் கூறுகின்றன. அதை நீவிர் அறிந்திலிர் போலும் !" என அச் சான்றோர்க்கே அறம் உரைக்கவும் துணிந்து விட்டான்.

அவன் அவ்வாறு உரைக்கக் கேட்ட சான்றோர், அவன்பால் கொண்ட சினம் தணிந்தனர். அவனைப் பண்டே அறிந்த அவர்கள், அவன் கூறியன யாவும் உண்மை என்பதை உணர்ந்தனர். அறிவிழந்து அறம் பிறழ்ந்து போனது அவன் குற்றம் அன்று; அவனை அந்நிலைக்குக் கொண்டுவிட்ட காதல் நோயே குற்றம் உடைத்து என உணர்ந்தனர். உடனே, அவன் கூறிய கூற்றின் துணையால், அவனை அந்நிலைக்குக் கொண்டு விட்ட அவ்வூர்ப் பெண் யாவள் என அறிந்து, அவளை அவனுக்கு மணம் செய்து அளிக்குமாறு அப்பெண்ணின் பெற்றோரைப் பணித்து, இளைஞன் துயர் தீர்த்து அகன்றனர். அவனும், மேற்கொள்ள இருந்த மடல் ஏறலாம் அறம் அல்லாச் செயலைக் கைவிட்டு அக மகிழ்ந்தான்.

- இளைஞனின் மடலேறும் முயற்சி கண்டு, பாண்டி நாட்டில் அறம் பிறழ்ந்து விட்டதோ என மனம் கலங்கி பெரியோர், அவ்வூர்ச் சான்றோரால் அது கைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/199&oldid=590276" இலிருந்து மீள்விக்கப்பட்டது