பக்கம்:நெய்தற் கன்னி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 17

இம்மாலையன்று! உண்மை இதுவாகவும் அதை உணரும் தெளிவு வாய்க்கப் பெறாத என் நெஞ்சு, கொடுமை செய் தறியாத இம் மாலையைப் பழிக்கிறது; கொடுமையை வித்திட்டு வளர்த்து விட்ட காதலன் பின் திரிகிறது; மாலைக் காட்சியும், அம் மாலைக் காலத்தில் என்னைக் காண்பவர் என் நிலை கண்டு கூறும் அலரும் வருத்துமாறு, என்னைத் தனியே விடுத்து அக் கொடியோர் பின் சென்று விட்டது என் நெஞ்சு, அந் நெஞ்சின் கொடுமையை நான் என்னென்பேன்!” எனக் கூறிக் காதலன் நினைவால் தன் நெஞ்சு நெகிழ்ந்து அனுபவிக் கும் நீள்துயரைப் புறங்காட்டிப் புலம்பினாள். “வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கு அறத் தான்செய்த தொல்வினைப் பயன் துய்ப்பத் துறக்கம் வேட்டு

- எழுந்தாற்போல்

பல்கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலைசேர ஆனாது கலுழ்கொண்ட உலகத்து மற்றவன் 5 ஏனையான் அளிப்பான்போல் இகல் இருள் மதிசீப்பக் குடைநிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் இடைநின்ற காலம்போல் இறுத்தந்த மருண்மாலை!

மாலை நீ தூஅறத் துறந்தாரை நினைத்தலின், கயம்பூத்த போதுபோல் குவிந்த என் எழில்நலம் எள்ளுவாய், 10 ஆய்சிறை வண்டு ஆர்ப்பச் சினைப்பூப்போல் தலைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்,

மாலை நீ, தை எனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பை என்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்,

நெய்தல்-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/20&oldid=590097" இலிருந்து மீள்விக்கப்பட்டது