பக்கம்:நெய்தற் கன்னி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

தெளிந்து நலம் பெற்றாள்

நாணம் மடம் முதலாம் நற்பண்புகள் நிறைந்து, நல்ல குடியில் பிறந்த நங்கை யொருத்தி, தன் உள்ளம் விரும்பும் நல்லோன் ஒருவன்பால் காதல் கொண்டாள். காதல் இன்பத்தில் சில நாள் களித்து மகிழ்ந்தனர் இருவரும். ஆனால், அவர் காதலை அவர் பெற்றோர் அறியாராதலின், காதலின்ப நுகர்வில் இடையூறு பல குறுக்கிடக் கண்டு கவலை கொண்டனர். அதனால் இருவரும் பலர் அறிய மணந்து வாழும் வாழ்வில் மனங் கொண்டனர். அதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்வதாக வாக்களித்து இளைஞன் வீடு சென்றிருந்தான்.

நாட்டு நடப்பு அவன் முயற்சிக்குக் குறுக்கிட்டது. நாட்டில் போர் மூண்டு விட்டது. நாட்டைக் காக்க, இளைஞன் களம் புக வேண்டியதாகிவிட்டது. காதலியைக் கண்டு நிகழ்ந்ததைக் கூறி விடைபெற்றுச் செல்வதற்கும் காலம் இல்லாது போயிற்று. ஆனால் அவளோ, காதலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/202&oldid=590279" இலிருந்து மீள்விக்கப்பட்டது