பக்கம்:நெய்தற் கன்னி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 இ புலவர் கா. கோவிந்தன்

சிரிக்கவும், கேட்பவர் காது செவிடுபட உரத்த குரல் எடுத்துப் பேசவும் தலைப்பட்டாள். அவ்வாறு சிரித்துக் கொண்டே யிருப்பவள், திடுமெனச் சிரிப்பதை விடுத்து, கருநீலமலர் இரண்டு இணையாக மலர்ந்தாற் போலும் கவினுடைய கண்ணின் இமைகள் இரண்டினும் நீர் நிறையுமாறு அழத் தொடங்கி விடுவள்.

அவள் நிலையை அவ்வூரார் கண்ணுற்றனர். பெண்டிர்க்குரிய பண்புகளால் நிறைந்தவள் அப்பெண் என்பதை அறிந்த அவர்கள், அத்தகையாளையும் தன் பெண்மையை மறக்கப் பண்ணும் கொடுமை காதலுக்கு இருப்பதை உணர்ந்தனர். "காதலன் காதலியரின் இரு உள்ளங்களும் ஒன்றுபடத் தோன்றும் காதல் வாழ்வில், அவர்கள் அக்காதல் இன்பத்தை வேட்கை தீர நுகர்வதற்கு முன்பே, அவருள் ஒருவரை அரியராகும்படி பிரியச் செய்து காதல் இன்பத்தை நிலையற்றதாக்கி விடும் இந் நிலைமையை ஆராய்ந்து பார்த்தால், யாழை மீட்டு இசையை எழுப்ப, அதிலிருந்து எழுந்த பண்ணின் இனிமையை, அவ்விசையை இருந்து கேட்போரின் காதுகள் நுகரத் தொடங்கியவுடனே, யாழின் நரம்பு அறுந்து போகும் நிலைமையைக் காட்டிலும் நனிமிகக் கொடிது!’ எனக் காதலின் இயல்பை வெறுத்துப் பழித்தனர். "அந்தோ தழைத்து வளர்ந்து கறுத்து நீண்ட கூந்தலையுடைய இப்பெண்ணின், காண்பவர் நெஞ்சை வருத்தும் இப்பண்பு கெட்ட நிலை நம் உள்ளத்தையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி விடுகிறது. என்றாலும் இவளை இமைப் பொழுது காணாதிருப்பதும் நம்மால் இயல வில்லை. நம் நெஞ்சு வருந்தினும் வருந்துக. அணுகி இவளைக் காண்போம். அணுகியவுடனே அகன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/204&oldid=590281" இலிருந்து மீள்விக்கப்பட்டது