பக்கம்:நெய்தற் கன்னி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இச் 205

வந்துவிட்டது. அவ்வளவே. ஊர்க் காவலரையும் ஏமாற்றி விட்டு, என் கனவின் வழியாகக் காதலன் வந்துவிட்டான். உடனே, காவலரால் பிடிக்க மாட்டாத அவனை, நான் பற்றிக் கொண்டேன். அவன் வடிவழகைக் காணக் கண்களை மெல்லத் திறந்தேன். என்ன வியப்பு ! பற்றியிருந்த பிடிக்குள்ளேயே அவன் எவ்வாறோ மறைந்து விட்டான். மறைந்து போன அவன், என்னை நினைத்து மீணடும் வருவானோ? அவன் வாராமையால் வருந்தும் நான், அவன் வந்தால் வரவேற்காது வெறுத்து ஊடி இருப்பது என்னால் இயலுமோ?” என ஊராரை நோக்கி உசாவினாள்.

சிறிது பொழுது எங்கும் அமைதி. பொதுமக்களையே பார்த்துப் பிதற்றிக் கொண்டிருந்தவள். திடுமென எழுந்து, வானத்தில் விளங்கும் ஞாயிற்றை நோக்கினாள். "கதிர்களுள் ஒன்றையேனும் பிறர்க்குத் தந்து உதவாது அவ்வளவையும் ஒருவனாகவே பெற்றுக் காயும் ஞாயிறே! நீ மேலைத் திசை மலையிடையே சென்று மறைவா யாயின், உன்னை ஒன்று வேண்டிக் கொள்கிறேன். என் காதலன் இந்தப் பகுதியில் எங்கும் இலன். நீ செல்லும் உலகில் யாண்டேனும் இருந்தால் அவனைத் தேடித் தருவதே நினைவாய்த் தேடிப் பிடித்து என் கையில் கொண்டு வந்து தர வேண்டுகிறேன். அவ்வாறு தந்தால், என் உள்ளமாகிய அகலில், காதல் நோயாகிய நெய் வார்த்து, உயிராகிய திரியைக் கொளுத்தி எடுத்த தீ அவியும். அதைச் செய்து அருள வேண்டுகிறேன்!” என வேண்டிக் கொண்டாள். ... "

ஞாயிற்றினிடத்திலிருந்து எவ்வித விடையும் வந்திலது. அதனால் காதலனைத் தேடித் தருவது தன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/207&oldid=590284" இலிருந்து மீள்விக்கப்பட்டது