பக்கம்:நெய்தற் கன்னி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 207

சேர்ந்து விட்டது. மாந்தளிர் நிறம் போன்ற மாலை வெய்யில் மன்றத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தின் உச்சியில் மட்டுமே ஒளி காட்டிற்று. அதைக் கண்டாள் அப் பெண். ஞாயிறு, காதலனைத் தேடித் தரவோ, தேடிப் பெறத் துணை புரியவோ செய்யாது போயினும், அவனை அடையத் துடிக்கும் தன் செயல் தவறுடையதன்று; அஃது உலகத்தோடு ஒட்டிய செயலே என்பதையாவது உணர்தல் வேண்டும் என விரும்பினாள். உடனே ஞாயிற்றின் மாலை வெய்யிலை விளித்தாள். "காதலர் காதலித்த மகளிரை மறந்து, அம் மகளிர் காதல் நோயால் வருந்தி மெல்லிய தம் தோள்கள் வாடி வனப்பிழக்கும்படி துயர் செய்யினும், அம்மகளிர், அவர் அழகில் கருத்திழந்து வருந்துவதல்லது. அவர் செயல்களின் நன்மை தீமைகளை ஆராய்வதை நான் பார்த்ததில்லை. உலகம் தோன்றிய அந்நாள் தொட்டு இவ்வுலகிற்கு ஒளிகாட்டும் நீ, அந்நாளிலிருந்து இந்நாள் வரை அவ்வாறு நிகழக் கண்டிலை யாயினும், கேட்டாவது அறிவையோ" எனக் கேட்டாள். ஆனால், ஞாயிறு அதையும் மனத்திற் கொள்ளாதே மறைந்து விட்டது. -

- ஞாயிறு மறையவே, அவள் அதை விடுத்துத் தன்னைச் சூழ்ந்து நின்றாரை அணுகினாள். 'பெரியோர்களே ! காதலன் அளித்த காமநோய் நெருப்பாக நின்று சுடுகிறது. என்றாலும் அதைப் புறம் தோன்றாவாறு மறைத்துக் கொள்வேன். அதுமட்டுமன்று, இவ்வாறு நான் வருந்தவும், என் வருத்தத்தைப் போக்காது, வந்து வேடிக்கை பார்க்கும் இவ்வுலகை அழித்துவிடக் கருதுவதும் செய்யேன். கருதியிருந்தால் அதற்கு என் கண்ணிர் ஒன்றே போதும்; காதல் நோயால் வெப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/209&oldid=590286" இலிருந்து மீள்விக்கப்பட்டது