பக்கம்:நெய்தற் கன்னி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

உயிர் வாங்கும் மாலை

- இயற்கை வளத்தால் எழில் மிக்க ஒரு பேரூரில் இளங்காதலர் இருவர் வாழ்ந்திருந்தனர். நில வளத்தாலும் நீர் வளத்தாலும் நிகரற்று விளங்கிய அப்பேரூர் மக்களின் { Ð á ðf வளத்தாலும் மாண்புற்றுத் திகழ்ந்தது. ஊரின் மேற்கில் வானளாவ உயர்ந்த மலையொன்றைப் பெற்று மாட்சிமையுற்றிருந்தது. நேமிப் படையேந்திய நெடுமால் நிற்கும் கோயில் ஊரின் இடையே விளங்கி விழுப்பயன் அளித்தது. அல்லியும் தாமரையும் அலரும் அழகிய பொய்கைகள் ஆங்காங்கே இடம் பெற்றுப் பெருவனப் பளித்தன. முல்லை முதலாம் நல்ல மலர்க் கொடிகள் பல மண்டிக் கிடந்தன. மா, பலா, வாழை போலும் வகை வகையான மரங்கள் செறிந்த சோலைகள் அவ்வூருக்குச் சிறப்பளித்தன. புகழ் கேட்கவும் நானும் பேருள்ளம் வாய்ந்த பெரியோர்களும், அந்திக் காலத்தில் செந்தழல் ஒம்பி அறநெறி காட்டும் அந்தணர் முதலாம் ஆன்றோர்களும் வாழ்ந்து அந்நகரின் அறவாழ்விற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/21&oldid=590098" இலிருந்து மீள்விக்கப்பட்டது