பக்கம்:நெய்தற் கன்னி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 ஒ. புலவர் கா. கோவிந்தன்

மிகுந்து வெளிப்படும் என் கண்ணிரைத் தெளிப்பே னானால், இவ்வுலகம் வெந்து அழிந்து போகும். ஆனால், அத்தகைய கொடிய உள்ளம் எனக்கு இல்லாமையால், அந்நீரை என் கண்ணிமைக் குள்ளேயே அடக்கி மறைத்து விடுவேன். - - -

"பெரியோர்களே! இவ்வாறு நான் கொண்ட காதலும், அவன் வந்து அன்பு செய்யாமையால் வந்துற்ற காதல் நோவுமாகிய இவ்விரு துன்பங்கள், இருபுறமும் நின்று என் உயிரை வருத்துகின்றன. அவற்றைப் புறம் தோன்றாவாறு காத்துக் காத்து என் உயிரும் மெலிந்து விட்டது. அது தன்னால் தாங்கும்வரை அவற்றைப் பொறுத்து விட்டது. இனியும் அவற்றைத் தாங்குவது அதனால் இயலாது. இந்நிலை மேலும் நீண்டால், என் உயிர் அழிந்து விடும். ஆகவே, என் காதல் நோயைக் களைந்துஎன் உயிரைக் காக்க விரைந்து வாருங்கள்!" எனக் கூறி வேண்டிக் கொண்டாள்.

இந் நிகழ்ச்சி ஒரு நாள் அன்று, இருநாள் அன்று, பல நாள். இரவு பகலாக இவ்வாறே பிதற்றித் திரிந்தாள். வருந்தி அழுதாள். இரவும் பகலும் காதல் இன்பம் பெற மாட்டாது கொன்னே கழிகின்றனவே என எண்ணிப் பெருமூச்செறிந்தாள். -

ஒருநாள் இரவு அவன் திடுமென விந்து சேர்ந்தான். அவனை ஆரத் தழுவி அகம் மகிழ்ந்தர்ள். அவள் மன் மயக்கம் அறவே மறைந்தது. பண்டேபோல், பெண்மை யெலாம் சேரப்பெற்ற பெண்டிர் திலகமாய்க் காட்சி அளித்தாள். நீர் என்றோ மண் என்றோ பிரித்துக் கூற மாட்டாது கலங்கிய நீர், தேற்றாங் கொட்டை இடப் பெற்றதும், தெளிந்து விடுவதுபோல், மனத்தெளிவு பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/210&oldid=590287" இலிருந்து மீள்விக்கப்பட்டது