பக்கம்:நெய்தற் கன்னி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 209

அம்மங்கை நல்லாளின் மாண்பு கண்டு பாராட்டினர் அவ்வூரார்.

"புரிவுண்ட புணர்ச்சியுள் புல்ஆரா மாத்திரை, அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண் செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது நயம் நின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும், பயன் இன்று மன்றம்ம காமம்; இவள் மன்னும் 5 ஒள்நுதல் ஆயத்தார் ஒராங்குத் திளைப்பினும் முள்நுனை தோன்றாமை முறுவல் கொண்டடக்கித், தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண்இன்றி யாவரும் தன்குரல் கேட்ப நிரைவெண்பல் மீஉயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே - 10 பூஉயிர்த்தன்ன புகழ்சால் எழில் உண்கண் ஆஇதழ் மல்க அழும். -

میو

ஒஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்; காண்பாம் கணங்குழை பண்பு" என்று எல்லீரும் என்செய்தீர்? என்னை நகுதிரோ? 15 நல்ல நகாஅலிர் மற்கொலோ, யான் உற்ற அல்லல் உlஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின், - 'எல்லா! நீ உற்றது எவனோ? மற்று' என்றீரேல், என்சிதை செய்தான் இவன் என உற்றது இது என --- 20 எய்த உரைக்கும் உரன்அகத்து உண்டாயின், பைதலவாகிப் பசக்குவ மன்னோ, என் நெய்தல் மலர்அன்ன கண்?

நெய்தல்-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/211&oldid=590288" இலிருந்து மீள்விக்கப்பட்டது