பக்கம்:நெய்தற் கன்னி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இ. புலவர் கா. கோவிந்தன்

கோடுவாய் கூடாப் பிறையைப், பிறிது ஒன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுள்; கண்டு ஆங்கே ஆடையால் மூஉய் அகப்படுப்பேன், சூடிய காணான் திரிதருங் கொல்லோ, மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்!

தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே வள்ளியை ஆகென நெஞ்சை வலியுறீஇ, உள்ளி வருகுவர் கொல்லோ? உளைந்துயான் எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள் மாந்தர் கடிகொண்ட கங்குல் கனவினால் தோன்றினனாகத் தொடுத்தேன்மன், யான் தன்னைப் பைஎனக் காண்கு விழிப்ப யான்பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து.

கதிர்பகா ஞாயிறே! கல்சேர்தி யாயின் அவரை நினைத்து நிறுத்து என்கை நீட்டித் தருகுவை யாயின், தவிரும் என் நெஞ்சத்து உயிர்திரியா மாட்டிய தீ.

மையில் சுடரே! மலைசேர்தி நீயாயின் பெளவநீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை கைவிளக்காகக் கதிர்சில தாராய், என் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு. சிதைத்தானைச் செய்வது எவன்கொலோ எம்மை நயந்து நலம் சிதைத்தான்.

மன்றப் பனைமேல் மலை மாந்தளிரே! நீ தொன்று இவ்வுலகத்துக் கேட்டும் அறிதியோ?

25

30

35

40

45.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/212&oldid=590289" இலிருந்து மீள்விக்கப்பட்டது