பக்கம்:நெய்தற் கன்னி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 * புலவர் ಹT. கோவிந்தன்

இப்போது இட மறந்து விட்டாள். நீல மணி வைத்திழைத்த பொன் தகடோ, மாந்தளிரோ எனப் பாராட்டதக்க நிறத்தைப் பெற்றிருந்த அவள் மேனி, பசலையால் மூடப் பெற்றுக், கோங்க மலரின் மகரந்தம் படிந்த மாந்துளிரோ என எண்ணும்படியாகி விட்டது. இவ்வாறு தன் பண்டை அழகையெல்லாம் இழந்துவிட்ட அப்பெண்ணினல்லாள், அம் மட்டோடும் அமையாது, காதல் வெறியூட்டும் பொருள்களைக் காணும் போதெல்லாம் நெஞ்சகம் வெறி கொள்ளவும் எக்காலமும் காதல் நினைவாகவே இருக்க வும் தலைப்பட்டாள்; மக்களைப் பார்க்க நாணி மண்ணையே பார்க்கத் தலைப்பட்டாள்; இந்நிலையால் தன் நாண் அழிந்து விடுமோ என எண்ணி அஞ்சத் தொடங்கினாள். அச்சம் உடனே அழுகையாக மாறிவிடும். சிறிது நாழிகைக்கெல்லாம் வாய்விட்டுப் புலம்பவும் தொடங்கி விடுவாள். இவள் நிலையை ஊரார் கண்டனர். அவள் நிலை குறித்து இரங்கினர். அவளைச் சூழ்ந்து கொண்டு, "இவள் படும் பாட்டைப் பார்த்தீர் களா?” எனப் பக்கத்தில் உள்ளாரைக் கேட்டும் உள்ளம் நொந்தனர். அவ்வாறு கேட்ட்வாறே அவளை வந்து சூழ்ந்தும் கொண்டனர்.

தன்னை வந்து சூழ்ந்து கொண்டவரை அவள் 'பார்த்தாள்; அவர்கள் தன் நிலை குறித்துத் தமக்குள்ளே பேசிக் கொள்வதையும் கேட்டாள். உடனே, " இவ ளொருத்தி என்ன காரியம் செய்து விட்டாள் பார்த்தீர் களா? என்று கேட்டு நிற்கும் பெரியோர்களே! நான் ஒருவகையில் சிறந்ததொரு செயலையே செய்துள்ளேன். வேட்டுவர் காட்டிற்குச் சென்று, முன்னே யாழை மீட்டி இனிய இசையை எழுப்ப, இவ்வின்னிசை கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/216&oldid=590293" இலிருந்து மீள்விக்கப்பட்டது