பக்கம்:நெய்தற் கன்னி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 215

அசுனும், அவ்வின்பத்தில் மயங்கி இருப்புழி, உடனே பறை போன்ற இன்னா இசைகளை எழுப்ப, அவ்விசை கேட்கப் பொறாது அது உயிர் இழக்க, அதைக் கைப்பற்றி வருவதுபோல், ஒருவன் முன்னே காதல் இன்பம் அளித்துப் பின்னர் அறவே கைவிட்டுச் சென்று விட்டான். அக்களவுக் காதலால் என் தோளை மெலிவித் தானையே விரும்பி, அவனிடம் சென்று, அங்கேயே நின்று விட்டது என நெஞ்சு. என்னைச் சூழ்ந்து நின்று என் நிலை குறித்து இரங்கும் நீங்கள், இவ்வாறு வீணே இரங்குவதை விடுத்து, நவகண்டம் என்று சொல்லப்படும் நாடுகளுள் எந்நாட்டில் இருப்பினும் அவனைத் தேடிவந்து தந்தால், நானும் உங்களைப் போலவே நிறையெனும் நற்குணத்தைக் குறைவறப் பெற்றவளாவேன்!” என்று கூறினாள்.

அதற்கு அவர்கள் ஏதும் விடை தந்திலர் ஆனால் அவளை விட்டுப் போவதோ, அவள் நிலை குறித்துப் பேசுவதைக் கைவிடுவதோ செய்திலர். அதனால் அவள் அவர்களை மீண்டும் நோக்கி, "என்றேனும் ஒரு நாள், இவள், இவள் காதலனைப் பெற்று மகிழ்வாள். அந் நிலையை நாமும் காணுதல் வேண்டும்!” என்ற கருத்தின ராய் என்னைப் பின்தொடர்ந்து வருகின்றீர்கள். அதே நிலையில், 'இவள் பெரிதும் வருந்தி விட்டாள்!" என்றும், 'இவளை இவ்வாறு வருந்த விட்ட அவன், சென்ற இடத்தில் ஏதும் துன்புறாமல் உள்ளானோ? என்றும் உசாவுகின்றீர்கள். பிறகு, அந்தோ! இவள் அறிவு மயங்கி விட்டதே! என்று மருளுகின்றீர்கள். இவ்வாறு என் நிலை குறித்து நீங்கள் சிறிதும் கலங்காதீர்கள். கலங்கப் பிறந்தவள் நான்!” என்று கூறி, அவர்களுக்கு ஆறுதல் உரைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/217&oldid=590294" இலிருந்து மீள்விக்கப்பட்டது