பக்கம்:நெய்தற் கன்னி.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இ. புலவர் கா. கோவிந்தன்

அவர்களுக்கு ஆறுதல் உரைத்தவள் உள்ளத்தில் ஓர் அச்சம் புகுந்து கொண்டது. இவளை வருந்தவிட்டவன் போன இடத்தில் கேடின்றி உள்ளானோ? என்று அவர்கள் கேட்டது, பிரிந்து துயர் செய்த கொடுமையால் காதலனுக்குக் கேடு வந்துறுமோ என்ற அச்சத்தை உண்டாக்கி விட்டது. உடனே ஞாயிற்றைப் பார்த்தாள். "உலகக் கேடுகளை விழித்து உண்மையை நிலை நாட்டும் ஞாயிறே ! உலகியல் அறியாத அறிவிலிகள்பால் நீ கடுஞ்சினம் உடையாய் என்று பிறர் கூறக் கேட்டுள்ளேன். அதனால் உன்னை வணங்கி வழிபட்டு ஒருவரம் கேட்டுக் கொள்ள வந்துள்ளேன். என் நெஞ்சம் கெட்டு அழியும்படி கைவிட்ட காதலனைச் சினக்கும் போது, என்னை மட்டும் விட்டு விடாதே! அவனை இல்லாமல் நான் உயிர் வாழ்தல் இயலாது. ஆதலின், அவனோடு என்னையும் சேர்ந்தே சினப்பாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

அவள் அவ்வாறு வேண்டிக் கொண்டிருக்கும் போதே, ஞாயிறு மறையத் தொடங்கி விட்டது. மாந்துளிர் நிறம் காட்டும் மாலை வெய்யில் காட்சி அளித்தது. அந்நிலையில் மகளிர் சிலர் தங்களை மாலை ஒப்பனை செய்துகொண்டு உலாவரத் தலைப்பட்டனர். அக்காட்சி யைக் காணவே அவளுக்கு அவன் நினைவு வந்து விட்டது. உடனே, "மாலை வரக் கண்ட இவ்வூர் மகளிர், தங்களைப் போன்ற ஒருத்தி காதல் நோயால் கலங்குகிறாள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், தம்மை அணிசெய்து கொண்டு, தம்மைத் தாமே புகழ்ந்து செல்கின்றனர். என்னே இவர்தம் செருக்கு ஆச்சா மரங்கள் அடர்ந்த காட்டைக் கடந்து போயிருக்கும் என் காதலன் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/218&oldid=590295" இலிருந்து மீள்விக்கப்பட்டது