பக்கம்:நெய்தற் கன்னி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 221

அழியத் துறந்தானைச் சிறுங்கால் என்ன 25 ஒழிய விடாதீமோ என்று. -

அழிதக மாஅந்தளிர்கொண்ட போழ்தினான்; இவ்வூரார் . தாஅம் தளிர்சூடித் தம்நலம் பாடுப; - o வாஅம் தளிர்க்கும் இடைச்சென்றார் மீள்தரின் யாஅம் தளிர்க்குவேம் மன். - 30

நெய்தல் நெறிக்கவும் வல்லன், நெடுமென் தோள் பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன், இளமுலைமேல் தொய்யில் எழுதவும் வல்லன்; தன்கையில் சிலைவல்லான் போலும் செறிவினான்; நல்ல பலவல்லன் தோளாள் பவன். - 35

நினையும்என் உள்ளம்போல் நெடுங்கழி மலர்கூம்ப இனையும்என் நெஞ்சம்போல் இனம்காப்பார்குழல்தோன்றச், சாயஎன் கிளவிபோல் செவ்வழியாழ்இசைநிற்பப் போயளன் ஒளியேபோல் ஒருநிலையே பகல்மாயக் காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை 40 மாலையும் வந்தன்று இனி,

இருளொடு யான் ஈங்குழப்ப, என்இன்றிப் பட்டாய், அருள் இலை, வாழி சுடர்! - ஈண்டு நீர் ஞாலத்துள் எங்கேள்வர் இல்லாயின் - மாண்ட மனம்பெற்றார் மாசில் துறக்கத்து 45 வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின், யாண்டும் உடையேன் இசை.

ஊர்அலர் தூற்றும் இவ்வுய்ய விழுமத்துப் பிர்அலர் போலப் பெரிய பசந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/223&oldid=590300" இலிருந்து மீள்விக்கப்பட்டது